இந்தியா

“டெல்லியைப் போல மகாராஷ்டிராவிலும் வன்முறையை நிகழ்த்த விரும்பியது பா.ஜ.க” - சிவசேனா அதிரடி குற்றச்சாட்டு!

டெல்லியைப் போல மராட்டியத்திலும் வன்முறை நடக்க பா.ஜனதா விரும்பியது என்று சிவசேனா குற்றஞ்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“டெல்லியைப் போல மகாராஷ்டிராவிலும் வன்முறையை நிகழ்த்த விரும்பியது பா.ஜ.க” - சிவசேனா அதிரடி குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான மகா விகாஸ் கூட்டணி, 100 நாள் ஆட்சியை நிறைவு செய்ததை அடுத்து முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, அயோத்தி சென்று ராமர் கோயிலில் வழிபட்டார். இந்நிலையில் அயோத்தி சென்று வந்த உத்தவ் தாக்கரேயை ‘போலி வேடம் போடுபவர்' என பா.ஜனதா விமர்சித்தது. இதற்கு சிவசேனாவின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னா பதிலடி கொடுத்துள்ளது.

இதுகுறித்து சாம்னாவில் கூறப்பட்டுள்ளதாவது :

அயோத்தி பயணம் குறித்து முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயை விமர்சிக்கும் பா.ஜனதாதான் உண்மையில் போலி வேடம் போடுகிறது. உத்தவ் தாக்கரே அயோத்தி சென்றதற்கு பா.ஜனதாவினர் மகிழ்ச்சிதான் அடைந்திருக்க வேண்டும். ஆனால் பா.ஜ.கவினரால் உத்தவ் தாக்கரே அயோத்தி சென்றதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

மராட்டிய பா.ஜனதா தலைவர்கள் உத்தவ் தாக்கரேயை விமர்சிப்பதில் இருந்து அவர்களின் தீய நோக்கங்கள் அம்பலப்படுகின்றன. கூட்டணி கட்சியினர் வேறுபட்ட கொள்கைகளைக் கொண்டிருக்கலாம். ஆனால் மக்கள் சேவையில் ஈடுபட்டு, மனிதர்களை சமமாக நடத்த வேண்டும். நாங்கள் அதைத் தான் பின்பற்றுகிறோம்.

குடியுாிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் டெல்லியைப் போல மராட்டியத்திலும் வன்முறை நிகழ வேண்டும் என எதிர்க்கட்சி (பா.ஜனதா) விரும்பியது. ஆனால் உத்தவ் தாக்கரே அந்த பிரச்னையை கவனமாக கையாண்டு சிறிய சம்பவம் கூட நடக்காமல் பார்த்துக் கொண்டுள்ளார்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories