இந்தியா

இந்தியாவில் பரவிவரும் கொரோனா : ஐ.பி.எல் போட்டிகள் ரத்தாக வாய்ப்பு? - BCCI தலைவர் கங்குலி விளக்கம்!

கொரோனா பாதிப்பால் நடப்பாண்டு நடக்கவிருக்கும் ஐ.பி.எல் போட்டி ஒத்தி வைக்கப்படலாம் என மகாராஷ்டிர மாநில அமைச்சர் கூறியுள்ளார்.

இந்தியாவில் பரவிவரும் கொரோனா : ஐ.பி.எல் போட்டிகள் ரத்தாக வாய்ப்பு? - BCCI தலைவர் கங்குலி விளக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் மிகப்பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. சீனாவைத் தொடர்ந்து தென்கொரியா, ஈரான், இத்தாலி என பல்வேறு நாட்டு மக்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

லட்சக்கணக்கான மக்கள் இந்த ஆட்கொல்லி வைரஸால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வைரஸ் தாக்கத்தால் உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறவிருந்த முக்கிய நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டும் ரத்தும் செய்யப்பட்டும் வருகின்றன.

இந்நிலையில், இந்தியாவிலும் கொரோனா வைரஸால் 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் நடப்பாண்டு நடைபெறவிருக்கும் ஐ.பி.எல் போட்டியை ஒத்திவைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பரவிவரும் கொரோனா : ஐ.பி.எல் போட்டிகள் ரத்தாக வாய்ப்பு? - BCCI தலைவர் கங்குலி விளக்கம்!

வருகிற மார்ச் 29ம் தேதி தொடங்கவுள்ள ஐ.பி.எல் போட்டியின் முதல் லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. சென்னை-மும்பை அணிகள் மோதவுள்ள இந்த ஆட்டத்தைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இப்படி இருக்கையில் கொரோனா அச்சம் காரணமாக மும்பையில் நடக்கவிருக்கும் முதல் ஆட்டம் உட்பட 7 போட்டிகளையும் ரத்து செய்ய மகாராஷ்டிர அரசு ஆலோசித்து வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் கூறியுள்ளார். ஏனெனில், அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடும் போது கொரோனா வைரஸ் பரவுவதற்கு அதிக வாய்ப்பிருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்தியாவில் பரவிவரும் கொரோனா : ஐ.பி.எல் போட்டிகள் ரத்தாக வாய்ப்பு? - BCCI தலைவர் கங்குலி விளக்கம்!

இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக பேசியுள்ள பி.சி.சி.ஐ தலைவர் சவுரவ் கங்குலி, ஐ.பி.எல் தொடங்குவதற்கு இன்னும் நாட்கள் உள்ளன. ஆகையால் பீதியடையவேண்டாம். கொரோனா காரணமாக ஐ.பி.எல் போட்டி தடைபடாது. திட்டமிட்டபடி நடக்கும். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பி.சி.சி.ஐ நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

கிரிக்கெட் வீரர்கள், பார்வையாளர்கள், பணியாளர்கள் என அனைவரும் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு மைதானத்தில் அனுமதிக்கப்படுவர்” எனக் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories