இந்தியா

“மிகப் பெரிய இன அழிப்புக்கு இந்தியா தயாராகிறது” : பிரபல ஆராய்ச்சியாளர் அதிர்ச்சி தகவல்!

மோடி ஆட்சியில் இந்தியா மிகப்பெரிய இன அழிப்புக்குத் தயாராகி வருகிறது என்று டாக்டர் கிரிகரி ஸ்டாண்டன் குற்றச்சாட்டியுள்ளார்.

“மிகப் பெரிய இன அழிப்புக்கு இந்தியா தயாராகிறது” : பிரபல ஆராய்ச்சியாளர் அதிர்ச்சி தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அமெரிக்காவின் வாஷிங்டன்னில், அமெரிக்க காங்கிரஸ் கட்சியின் சார்பில் “காஷ்மீர் மற்றும் என்.ஆர்.சி பற்றிய களநிலை” என்ற தலைப்பில் கருத்தரங்கு ஒன்று நடத்தப்பட்டது.

அந்த கருத்தரங்கில் அமெரிக்காவில் பிரபல கல்லூரியின் ஆராய்ச்சி பேராசிரியராகவும், இனப்படுகொலை கண்காணிப்பு தொடர்பாக ஒரு அமைப்பை நிறுவி உலகில் பல்வேறு நாடுகளில் நடந்த இனப்படுகொலைகள் பற்றிய அதிர்ச்சி தகவல்களையும் உண்மை விபரங்களையும் ஆதோரத்தோடு வெளிக்கொண்டு வந்தவருமான டாக்டர் கிரிகோரி ஸ்டாண்டன் கலந்துக்கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர், அசாம் மற்றும் காஷ்மீரில் சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்து வன்முறை கட்டவிழ்த்துவிடப்படுவதாகவும், அந்த இரண்டு மாநிலங்களில் இனஅழிப்பு நடக்க இன்னும் ஒரு படிமட்டுமே உள்ளதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்திருந்தார்.

டாக்டர் கிரிகரி ஸ்டாண்டன்
டாக்டர் கிரிகரி ஸ்டாண்டன்

மேலும் பேசிய அவர், “இந்தியாவில் இஸ்லாமியர்கள் இன அழிப்புக்காக முன்னெடுக்கப்படும் முயற்சிகளை படி நிலைகளாக எடுத்துரைத்தார்.

அதில், முதல்படியாக வகைப்படுத்தல். அதாவது, இஸ்லாமியர்கள் நாட்டுக்கு எதிரானவர்கள் என வகைப்படுத்தல்.

இரண்டாவது படி, அடையாளப்படுத்துதல். பாதிக்கப்பட்டவர்களை அந்நியர்கள் - வெளிநாட்டவர் என அடையாளப்படுத்துவது.

முன்றாவது படி, பாகுபாடு காணுதல். குடியுரிமை வழங்குவதில் பாகுபாடு பார்த்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தை நாடற்றவர்களாக்கி அவர்களுக்கு குடிமக்களுக்கான எந்த வித சிவில் உரிமையும் கிடைக்காமல் செய்வது போன்றவற்றின் மூலம் பாகுபாடு காட்டப்படுகிறது.

நான்காவது படிநிலை, மனிதத்தன்மையற்றவர்களாக சித்தரிப்பது. குறிப்பிட்ட சமூகத்தினரை தீவிரவாதி - மனித சமூகத்திற்கு எதிரானவர்கள் என வசைபாடுவதன் மூலம் சமூக வெறுப்பை, அவர்கள் மீது ஏற்படுத்தி அவர்களை மனிதத்தன்மையற்றவர்களாக சித்தரிப்பதாகும்.

“மிகப் பெரிய இன அழிப்புக்கு இந்தியா தயாராகிறது” : பிரபல ஆராய்ச்சியாளர் அதிர்ச்சி தகவல்!

ஐந்தாவது படிநிலை, இன அழிப்பு செய்வதற்காக நிறுவனம் அமைத்தல். உதாரணம் காஷ்மீரில் இந்திய ராணுவம், அசாமில் தேசிய குடியுரிமை பதிவேடு அதிகாரிகளை கொண்டுவந்தது.

ஆறாவது படிநிலை என்பது ஒன்றுகுவித்தல், பிரசாரங்கள் செய்து ஒரு குறிப்பிட்ட பிரிவினரை தனிமைப்படுத்த, அவர்களுக்கு எதிராக மற்றவர்களை ஒன்றுகுவிப்பதாகும்.

ஏழாவது படி, இன அழிப்புக்காக தயாராகுதல்.

எட்டாவது துன்புறுத்தல். காஷ்மீர் மற்றும் அசாமில் தற்போது நடந்துக் கொண்டிருப்பது.

ஒன்பதாவது, மக்களை அழித்தொழித்தல்.

இறுதியாக பத்தாவது, செய்த படுபாதக செயலை மறுத்தல்.

இவ்வாறு அவர் இந்தியாவில் மோடி அரசு நிகழ்த்தும் சிறுபான்மையின அழிப்பு முயற்சியை ஒப்புமை செய்து விவரிக்கிறார். இன்னும் ஒரு படி நிலை மட்டுமே மீதம் இருக்கிறது. காஷ்மீர் மற்றும் அசாம் மக்கள் அதை மீது அந்த படி நிலை நிகழ்த்தப்பட்டால் அதுவே “இன அழிப்பு” என்று எச்சரிக்கிறார் கிரிகோரி ஸ்டாண்டன்.

banner

Related Stories

Related Stories