இந்தியா

“டெல்லி வன்முறையை திசைதிருப்ப கொரோனா பீதியைக் கிளப்பவேண்டாம்” : மோடி அரசுக்கு மம்தா பானர்ஜி எச்சரிக்கை!

டெல்லி வன்முறையை மறைக்க கொரோனா வைரஸ் குறித்த அச்சத்தை மோடி அரசு கிளப்பிவிடுகிறது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

“டெல்லி வன்முறையை திசைதிருப்ப கொரோனா பீதியைக் கிளப்பவேண்டாம்” : மோடி அரசுக்கு மம்தா பானர்ஜி எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. கடந்த 3 நாட்களில், இத்தாலி சுற்றுலா பயணிகள் 16 பேர் உட்பட 29 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேற்குவங்கத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு பேசிய மம்தா பானர்ஜி, “டெல்லி வன்முறை சம்பவத்தை திசைதிருப்பவே கொரோனா வைரஸ் குறித்த அச்சத்தை மத்திய பா.ஜ.க அரசு கிளப்புகிறது.

இந்தியாவிற்கு கொரோனா வந்துவிட்டதாக கத்திக்கொண்டிருக்கிறார்கள். கொரோனா ஒரு கொடிய நோய் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதனை சாதகமாகப் பயன்படுத்தி மத்திய அரசு பீதியைக் கிளப்ப வேண்டாம்.

டெல்லி வன்முறை என்ற உண்மையான கொரோனா வைரஸை மறக்கச் செய்ய, டி.வி சேனல்கள் மூலம் அவர்கள் கொரோனா வைரஸை சுற்றி ஒரு மிகைப்படுத்தலை உருவாக்குகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories