இந்தியா

இந்தியாவில் கொரோனா : முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹோலி பண்டிகையில் கலந்து கொள்வதைத் தவிர்த்த மோடி !

கொரோனா வைரஸ் பரவுவதை அடுத்து ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அறிவித்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா : முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹோலி பண்டிகையில் கலந்து கொள்வதைத் தவிர்த்த மோடி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸால் இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தென்கொரியா, ஜப்பான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸால் மக்கள் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி வருவது அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலியில் இருந்து வந்த டெல்லியைச் சேர்ந்த ஒருவருக்கும், துபாயில் இருந்து வந்த தெலங்கானாவைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் கொரோனா : முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹோலி பண்டிகையில் கலந்து கொள்வதைத் தவிர்த்த மோடி !

இந்நிலையில், இத்தாலியில் இருந்து இந்தியா வந்த 16 பேருக்கும் அவர்களுடன் இருந்த டிரைவருக்கும், டெல்லியில் ஒருவர், ஆக்ராவில் 6 பேர் உட்பட மொத்தம் 28 பேருக்கு இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால், இந்தியாவில் கொரோனா குறித்த அச்சம் மக்களிடையே மேலோங்கியுள்ளது. இதற்கிடையே, ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் தான் பங்கேற்க போவதில்லை என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்க்க கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே, இந்த ஆண்டு ஹோலி மிலன் நிகழ்ச்சியில் நான் பங்கேற்பதில்லை என முடிவெடுத்துள்ளேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஹோலி நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை என அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஹோலி இந்தியர்களுக்கான முக்கியமான பண்டிகை என்றாலும், கொரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு ஹோலி மிலன் கொண்டாட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன்.

அதிக அளவில் கூடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும், உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நன்கு கவனித்துக் கொள்ளும்படி அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories