இந்தியா

GSLV-F10 நாளை விண்ணில் செலுத்தப்படவிருந்த நிலையில் திடீரென ஒத்திவைப்பு - இஸ்ரோ அறிவிப்பு!

இயற்கைப் பேரிடர்கள் ஏற்படும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள GSLV-F10 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

GSLV-F10 நாளை விண்ணில் செலுத்தப்படவிருந்த நிலையில் திடீரென ஒத்திவைப்பு - இஸ்ரோ அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாட்டின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு உள்ளிட்ட ஆய்வுகளை மேற்கொள்ளும் செயற்கைக்கோள்களை, பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. வகை ஏவுகணைகள் உதவியுடன் இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது.

அந்த வகையில் பூமியைக் கண்காணிப்பதற்காக ஜிசாட்-1 செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்தது. 2,268 கிலோ எடையுடைய இந்த ஜிசாட்- 1 செயற்கைக்கோளை சுமந்தபடி GSLV-F10 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து நாளை மாலை 5.43 மணிக்கு விண்ணில் ஏவப்பட இருந்தது.

பூமி கண்காணிப்பு, கடல் சார் ஆய்வு, விவசாயம், வானிலை, பேரிடர் காலம், கனிம வளம் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக இந்த ஜிசாட்-1 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட இருந்தது.

ஜிசாட் - 1 செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ள அதி நவீன கேமராக்கள் அதில் பதிவாகும் புகைப்படங்கள் மற்றும் பூமியின் பரப்பை மிக துல்லியமாக படம் எடுத்து, இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பும்.

மேலும் வானிலை நிலவரங்களை கண்காணித்து, புயல் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர் காலங்களில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவும் விதத்திலும் இந்த செயற்கைக்கோள் தயாரிக்கப்பட்டுள்ளது.

GSLV-F10 நாளை விண்ணில் செலுத்தப்படவிருந்த நிலையில் திடீரென ஒத்திவைப்பு - இஸ்ரோ அறிவிப்பு!

இஸ்ரோ வடிவமைத்துள்ள ஜிஎஸ்எல்வி ராக்கெட் வகைகளில் இந்த எஃப்-10 வகை ராக்கெட் மிகவும் உயரமானதாகும். பூமிக்கு 36,000 கிலோ மீட்டர் தொலைவில் நிலை நிறுத்தும்படி இந்த செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்கைகோள் நாளை மாலை விண்ணில் ஏவப்பட இருந்த நிலையில், அதனை இஸ்ரோ ஒத்திவைத்துள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஜி.எஸ்.எல்.வி -எஃப் 10 ராக்கெட் ஏவப்படுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்படும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

ஏற்கெனவே இஸ்ரோவின் சந்திரயான்-2 விண்ணில் ஏவப்படும் சமயத்தில் கோளாறு ஏற்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னர், விண்ணில் செலுத்தியபோது விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் விழுந்து நொறுங்கியது. இது உலகளவில் பரபரப்பாக பேசப்பட்டது.

அதுபோல, ஜி.எஸ்.எல்.வி-எஃப் 10 விண்ணில் ஏவப்படவிருக்கும் நிலையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது சற்று சுணக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories