இந்தியா

அச்சுறுத்தும் கொரோனா - ஹைதராபாத்தில் 80 பேர் கண்காணிப்பு: தெலங்கானா அமைச்சர் அதிர்ச்சி தகவல்!

கொரோனா வைரஸ் தாக்குதல் உள்ளதா என்பதைக் கண்டறிய ஹைதராபாத்தில் 80 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸால் இந்தியாவில் தற்போது இருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் 25ம் தேதி இத்தாலியில் இருந்து விமானம் மூலம் இந்தியா வந்த ஒருவர் டெல்லிக்கு திரும்பினார். அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைப்போன்று ஈரானில் இருந்து பெங்களூர் திரும்பிய 24 வயதுடைய மென்பொருள் பொறியாளருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இத்தாலியில் இருந்து ஜெய்ப்பூருக்கு வந்த சுற்றுலா பயணி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு புனேவில் வைத்து மீண்டும் பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

அச்சுறுத்தும் கொரோனா -  ஹைதராபாத்தில்  80 பேர் கண்காணிப்பு: தெலங்கானா அமைச்சர் அதிர்ச்சி தகவல்!

இந்நிலையில் இதுதொடர்பாக தெலுங்கானா சுகாதாரத் துறை அமைச்சர் எல்டெலா ராஜேந்தர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பெங்களூருவில் உள்ள மென்பொருள் பொறியாளர் பணி காரணமாக துபாய்க்குச் சென்றுள்ளார். அங்கு அவர் ஹாங்காங்கைச் சேர்ந்தவர்களுடன் பணியாற்றியுள்ளார்.

அதன்பின்னர் கடந்த பிப்ரவரி 20ம் தேதி பெங்களூருக்கு பேருந்தின் மூலம் திரும்பிய அவர் 22ம் தேதி ஹைதராபாத் வந்துள்ளார். இந்நிலையில் திடீரென ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனைத்தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக நேற்று மாலை 5 மணியளவில் ஹைதராபாத்தில் உள்ள காந்தி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார், அங்கு அவருக்கு வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பொறியாளர் உடன் பேருந்தில் பயணித்தவர்கள், குடும்பத்தினர், அப்பல்லோ மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் என 80 பேரை கண்டறிந்து அவர்களையும் கண்காணித்து வருகிறோம் ”என்று சுகாதார அமைச்சர் கூறினார்.

banner

Related Stories

Related Stories