இந்தியா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு: நொய்டாவில் பள்ளிகள் மூடல்.. சிறப்பு முகாம் அமைக்க ராணுவத்துக்கு ஆணை!

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, நொய்டாவில் உள்ள 2 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு முகாம் அமைக்க ராணுவத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு: நொய்டாவில் பள்ளிகள் மூடல்.. சிறப்பு முகாம் அமைக்க ராணுவத்துக்கு ஆணை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்து வரும் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் அடியெடுத்து வந்துள்ளது மக்களை அச்சமடைய வைத்துள்ளது.

இத்தாலியில் இருந்து நேற்று டெல்லி வந்த நபருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தனிமைப்படுத்தப்பட்ட அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், டெல்லியை அடுத்த நொய்டாவில் உள்ள இரண்டு பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. அதில் ஒரு பள்ளியில் படிக்கும் குழந்தையின் தந்தைக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு: நொய்டாவில் பள்ளிகள் மூடல்.. சிறப்பு முகாம் அமைக்க ராணுவத்துக்கு ஆணை!

விசாரணை மேற்கொண்டதில், டெல்லி மயூர் விஹார் பகுதியைச் சேர்ந்ததான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர், கடந்த வாரம் தனது குழந்தையின் பிறந்த நாளை தனது வீட்டில் கொண்டாடியுள்ளார். இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் உடன் படிக்கும் மாணவர்களின் குடும்பத்தினரும் பங்கேற்றது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, சம்பந்தபட்ட குடும்பத்தினரை தனிமைப்படுத்திய சுகாதாரத்துறையினர் அனைவரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுத்தியுள்ளனர். அதில், யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. இருப்பினும் தொடர்ந்து கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு: நொய்டாவில் பள்ளிகள் மூடல்.. சிறப்பு முகாம் அமைக்க ராணுவத்துக்கு ஆணை!

இதனிடையே, கொரோனா பாதித்த நபரின் குடும்பத்தினர் 6 பேரின் ரத்த மாதிரியும் ஆக்ரா சோதனை மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதித்தவர்களுடன் பழகியவர்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி அவர்களை கண்காணிக்குமாறும், சுமார் 2500 பேர் தங்கும் வகையிலான சிறப்பு முகாமை அமைக்க வேண்டும் என்றும் ராணுவத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories