இந்தியா

#DelhiRiots : டெல்லி கலவரம் எதேச்சையாக நடைபெற்றதா? திட்டமிட்ட தாக்குதலா? - கள ஆய்வு மூலம் அம்பலம் !

வடகிழக்கு டெல்லியில் காவி கும்பலின் வன்முறை வெறியாட்டம் திட்டமிட்டு நடத்தப்பட்டது என கள ஆய்வின் மூலம் அம்பலமாகியுள்ளது.

#DelhiRiots : டெல்லி கலவரம் எதேச்சையாக நடைபெற்றதா? திட்டமிட்ட தாக்குதலா? - கள ஆய்வு மூலம் அம்பலம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உரிமைக்காக மக்கள் வீதியில் போராட வந்தால் காவி பயங்கரவாதிகளால் சூறையாடப்படுவீர்கள் என எச்சரிக்கும் வகையில், பா.ஜ.க அரசு அராஜகத்தை கடைபிடித்து வருகிறது.

அதற்கான முன்னோட்டமாக, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கடந்த வாரம் வடகிழக்கு டெல்லியில் போராடிய இஸ்லாமியர்கள் மீது இந்துத்வ கும்பல் வன்முறை வெறியாட்டத்தை நிகழ்த்தியுள்ளது. இந்தக் கலவரத்தில் 42 பேர் பலியான நிலையில், இன்னும் நூற்றுக்கணக்கானோர் உயிருக்குப் போராடி வருகின்றனர்.

மேலும், மதவாத கும்பலால் வடகிழக்கு டெல்லி முழுவதும் சூறையாடப்பட்டு சுடுகாட்டைப் போல காட்சி அளிக்கிறது. அதிலும், இஸ்லாமியர்களின் வீடுகள், பள்ளிவாசல்கள் மட்டுமே பெரும்பாலும் சூறையாடப்பட்டிருக்கிறது. இதனால் வன்முறையால் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்கள் சொந்த வீடு மற்றும் ஊரை விட்டு அகதிகளாக வெளியேறும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

#DelhiRiots : டெல்லி கலவரம் எதேச்சையாக நடைபெற்றதா? திட்டமிட்ட தாக்குதலா? - கள ஆய்வு மூலம் அம்பலம் !

இந்நிலையில், சி.ஏ.ஏவுக்கு எதிராக போராட்டம் நடக்கும் சமயத்தில் திடீரென கலவரம் மூண்டதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் அதில் மெய்யில்லை என ‘இந்தியா டுடே’ செய்தி நிறுவனம் வடகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறை குறித்து கள ஆய்வு மேற்கொண்டு செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், நகரில் உள்ள பல்வேறு உயரமான கட்டடங்களாக தேர்வு செய்து அதன் மீதிருந்து குறிபார்த்து ஒவ்வொரு பகுதியில் உள்ள வீடுகளையும் இந்துத்வ குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். பெட்ரோல் குண்டுகளை பள்ளிவாசல்கள் மீது எறிந்திருக்கிறார்கள்.

ஆசிட் பாட்டில்களை இஸ்லாமியர்களின் வீடுகளின் மீது குறிபார்த்து எறிந்து தங்களுடைய வன்மத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் இந்துத்வ குண்டர்கள். இதற்காக பிரத்யேகமாக பெட்ரோல், எரிபொருட்களை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

மேலும், ரப்பர் டயர்களில் கற்களை கட்டி போராட்டக்காரர்கள், போராட்டத்தில் பங்கேற்காத பொதுமக்கள் என பலர் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.

ஷிவ் விஹார் பகுதியில் உள்ள பள்ளியின் மாடியில் இருந்து இந்த கொடூரங்களை பா.ஜ.க குண்டர்கள் செய்துள்ளனர். ஆகவே நடந்த கலவரங்களும், தாக்குதல்களும் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ளது என்பது நிரூபணமாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories