இந்தியா

#DelhiViolence இஸ்லாமியர்களுக்காக குருத்வாராவை திறந்துவிட்ட சீக்கியர்கள்; சாலையை மறித்து உதவிய தலித்!

டெல்லியில் நடைபெறும் வன்முறையில் இருந்து இஸ்லாமியர்களை பாதுகாக்க குருத்வாராவை சீக்கியர்கள் திறந்துவிட்டுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

#DelhiViolence இஸ்லாமியர்களுக்காக குருத்வாராவை திறந்துவிட்ட சீக்கியர்கள்; சாலையை மறித்து உதவிய தலித்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் இஸ்லாமியர்கள் மீது இந்துத்வா குண்டர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இது ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தில் தொடங்கி வடகிழக்கு டெல்லி போராட்டம் வரை தொடர்ந்து வருகிறது.

டெல்லியில் சி.ஏ.ஏ-வுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களின்போது தொடர்ந்து பா.ஜ.கவின் குண்டர்கள் தாக்குதலில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. ஆனால், எத்தனை இன்னல்கள் வந்தாலும் கொஞ்சம் கூட சளைக்காமல் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பலர் மோடி அரசின் சட்டத்துக்கு எதிராக போராடி வருகின்றனர்.

#DelhiViolence இஸ்லாமியர்களுக்காக குருத்வாராவை திறந்துவிட்ட சீக்கியர்கள்; சாலையை மறித்து உதவிய தலித்!

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக வடகிழக்கு டெல்லியில் அமைதி வழியில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சமயத்தில் சி.ஏ.ஏவுக்கு ஆதரவான பேரணியில் பா.ஜ.கவின் முன்னாள் எம்.எல்.ஏ. கபில் மிஸ்ரா பேசியதை அடுத்து வெடித்த வன்முறை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்துத்வா கும்பல் நடத்திய வன்முறை வெறியாட்டத்தால் இதுவரை 17 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் இஸ்லாமியர்கள் மத்தியில் உண்டாக்கியுள்ளது. இந்நிலையில், இஸ்லாமியர்களின் ஒவ்வொரு போராட்டத்துக்கும் துணை நின்று அவர்களுக்கு சீக்கியர்கள் ஆதரவளித்து வருகிறார்கள்.

இதுதொடர்பான காணொளிகள் அவ்வப்போது சமூக வலைதளத்தில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறுவதோடு, நாட்டில் இன்னும் ஒற்றுமை மேலோங்கி வருவதை வெளிப்படுத்தியும் வருகிறது. அந்த வகையில், வடகிழக்கு டெல்லியில் பா.ஜ.க குண்டர்களால் பாதிக்கப்பட்டு வரும் இஸ்லாமியர்களுக்கு குருத்வாராவை திறந்துவிட்டு அடைக்கலம் கொடுத்து வருகிறார்கள் சீக்கியர்கள்.

இதேபோல, சீலம்பூர் கோகுலாபுரி உள்ளிட்ட பகுதியில் வன்முறையாளர்கள் வராத வண்ணம் சாலைகளை மறித்து முஸ்லிம்களை பாதுகாத்து வருகிறார்கள் தலித் மக்கள்.

இதுகுறித்து பதிவிட்டுள்ள எழுத்தாளர் நிலஞ்சனா ராய் “இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டிய அரசியல்வாதிகளும், காவல்துறையும் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டும், வன்முறையைத் தூண்டி விடுவதையே திண்ணமாக கொண்டுள்ளனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories