இந்தியா

“இந்தியாவுக்கு எதிராக பேசினால் சுட்டுக்கொல்ல வேண்டும்” - கர்நாடக பா.ஜ.க அமைச்சர் சர்ச்சை பேச்சு!

இந்தியாவுக்கு எதிராக பேசுவோரை சுட்டுக்கொல்லும் வகையில் சட்டம் உருவாக்க வேண்டும் என பா.ஜ.க அமைச்சர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 “இந்தியாவுக்கு எதிராக பேசினால் சுட்டுக்கொல்ல வேண்டும்” - கர்நாடக பா.ஜ.க அமைச்சர் சர்ச்சை பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இஸ்லாமியர்களுக்கும், சிறுபான்மையினர்களுக்கும் எதிராக உள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றனர்.

உரிமைக்காக போராடும் மக்களின் போராட்டங்களை ஒடுக்க ஆளும் மத்திய அரசு, தனது மதவாத குண்டர்களை ஏவி பல்வேறு இன்னல்களை கொடுத்து வந்தன. இருப்பினும், எவ்வித சலனும் இல்லாமல் மக்கள் தங்களது போராட்டத்தை நீட்டித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த வாரம் பெங்களூருவில் சிஏஏவுக்கு எதிராக பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் AIMIM கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி பங்கேற்றிருந்தார்.

 “இந்தியாவுக்கு எதிராக பேசினால் சுட்டுக்கொல்ல வேண்டும்” - கர்நாடக பா.ஜ.க அமைச்சர் சர்ச்சை பேச்சு!

அப்போது, அமுல்யா லியோனா என்ற கல்லூரி மாணவி, பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்டது பெரும் பரபரப்புக்கு வித்திட்டது. மேடையில் இருந்த ஓவைசியும் அந்த பெண்ணின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, பெங்களூரு போலிஸார் அமுல்யா மீது தேசத்துரோக பிரிவின் கீழ் கைது செய்துள்ளனர்.

அமுல்யாவின் பேச்சுக்கு வலதுசாரி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்தனர். ஆனால், அமுல்யாவின் உறவினர்களோ, அமுல்யா பேச வந்ததை முடிக்காமல் போனதாலேயே இந்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கர்நாடகாவின் வேளாண் துறை அமைச்சர் பி.சி.பாட்டீல் சித்ரதுர்காவில் செய்தியாளர்களிடம் பேசியபோது, “ இந்திய நாட்டின் காற்றை சுவாசித்து, இங்கே சாப்பிட்டுவிட்டு பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிடுவதா? இது போன்று இந்தியாவுக்கு எதிராக பேசுபவர்கள் யாராக இருந்தாலும் சுட்டுக் கொல்லும் வகையிலான சட்டத்தை உருவாக்க வேண்டும், இது போன்ற தேசத் துரோகிகளை ஒடுக்க கடுமையான சட்டங்களை பிரதமர் மோடி இயற்ற வேண்டும்.” என கூறியுள்ளார்.

பாட்டீலின் இந்த கருத்து போராட்டக்காரர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டு மக்களை ஒடுக்கும் வகையில் கொண்டுவரப்படும் சட்டங்களை எதிர்த்து போராடினால் தேசத் துரோகி என்பதா எனவும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

முன்னதாக, மாணவி அமுல்யாவை கொல்பவர்களுக்கு ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என ராம் சேனா பிரமுகர் கூறியிருந்தது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

banner

Related Stories

Related Stories