#CAA2019

’பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ கோஷமிட்ட பெண்ணின் தலைக்கு விலை வைத்த ஸ்ரீராம் சேனா : அதிர்ச்சியில் மக்கள் !

குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்ட பெண்ணை விடுவித்தால் கொன்று விடுவேன் என ராம் சேனா பிரமுகர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

’பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ கோஷமிட்ட பெண்ணின் தலைக்கு  விலை வைத்த ஸ்ரீராம் சேனா : அதிர்ச்சியில் மக்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக, கடந்த வாரம் பெங்களூருவிலும் CAA எதிர்ப்புப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், AIMIM கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி பங்கேற்றிருந்தார்.

அப்போது, அமுல்யா லியோனா என்ற கல்லூரி மாணவி ஒருவர் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக மேடையில் பேசியபோது பாகிஸ்தானுக்கு ஆதாரவாக கோஷமிட்ட வீடியோ நாடு முழுவதும் வைரலாகி பெரும் சர்ச்சைக்கு வித்திட்டது. அப்போது,மேடையில் இருந்த ஓவைசியும் மாணவியின் கோஷத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.

’பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ கோஷமிட்ட பெண்ணின் தலைக்கு  விலை வைத்த ஸ்ரீராம் சேனா : அதிர்ச்சியில் மக்கள் !

இதனையடுத்து, தேச துரோகச் சட்டத்தின் கீழ் மாணவி அமுல்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமுல்யா பேசியது தவறு என அவரது தந்தை வாஜி பேசிய வீடியோவும் சமூக வலைதளத்தின் பரவியது. இருப்பினும், அமுல்யாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பெங்களூருவில் ஆங்காங்கே போராட்டம் நடத்திய இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் அமுல்யாவின் வீட்டை சூறையாடி, அவரது தந்தை வாஜியை வலுக்கட்டாயமாக பாரத் மாதாகி ஜெய் என கூறவைத்தது மேலும் சர்ச்சையானது.

இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள மாணவி அமுல்யா லியோனாவை கொல்பவர்களுக்கு ரூ.10 லட்சம் சன்மானமாக வழங்கப்படும் என ஸ்ரீராம் சேனா அமைப்பைச் சேர்ந்த சஞ்சீவ் மராடி பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுமட்டுமல்லாமல் அமுல்யாவை காவல்துறை வெளியே விடக்கூடாது. அவ்வாறு அவர் வெளியே வந்தால் கட்டாயம் அந்த பெண்ணை கொன்றுவிடுவோம் என்றும் மராடி பேசியுள்ளார்.

மராடியின் இந்தப் பேச்சுக்கு தற்போது நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. சிறுமி செய்த தவறுக்கு காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வெறுப்பை உமிழும் வகையில் இந்தப் பேச்சு அமைந்திருப்பது மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

banner

Related Stories

Related Stories