இந்தியா

“முதல் ஆளாக நிற்பேன்னு சொன்னது நீ தானா; எங்க சார் ஆள காணோம்” : நடிகர் ரஜினியை விளாசும் தி.மு.க எம்.பி!

சென்னையில் சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டத்தின் போது இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து ‘வீதிக்கு வாங்க ரஜினி’ என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

“முதல் ஆளாக நிற்பேன்னு சொன்னது நீ தானா; எங்க சார் ஆள காணோம்” : நடிகர் ரஜினியை விளாசும் தி.மு.க எம்.பி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போலிஸார் திடீரென தடியடி நடத்தினர்.

இந்த தடியடி தாக்குதலில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோரை போலிஸார் கைது செய்துள்ளனர். போலிஸாரின் இத்தகைய நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் இஸ்லாமிய பெண்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டக்காரர்கள் மீது போலிஸார் நடத்திய அராஜக தாக்குதலுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க கூட்டணிக் கட்சியினர் கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

“முதல் ஆளாக நிற்பேன்னு சொன்னது நீ தானா; எங்க சார் ஆள காணோம்” : நடிகர் ரஜினியை விளாசும் தி.மு.க எம்.பி!

இந்நிலையில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய இஸ்லாமியர்கள் மீது போலிஸார் நடத்திய தாக்குதலுக்கு தி.மு.க. எம்.பி. டாக்டர் செந்தில்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செந்தில்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்ததாவது, “இஸ்லாமியர்களுக்கு ஒரு ஆபத்து என்றால் முதல் ஆளாக நான் நிற்பேன் என சொன்னது நீ தான, சொல் சொல்?

எங்க rajinikanth sir ஆள காணோம். Gate அ திறந்த உங்க வாழ்க்கையை ஆரம்பித்த தமிழகம், அதே gate அ முடி, முடித்து வைக்கவும் தயங்காது” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக சிஏஏவுக்கு ஆதரவு தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், இந்த சட்டத்தால் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டால், முதல் ஆளாக தான் களத்தில் இறங்கி போராடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து தற்போது இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டுள்ளனர். ரஜினி இதற்காக எதிராக போராடுவாரா? எனவும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் #ChennaiShaheenBagh, #வீதிக்குவாங்க_ரஜினி என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories