இந்தியா

நாட்டின் பொருளாதாரத்தை டன் கணக்கில் அளவிட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா - அதிர்ச்சியில் உறைந்த மக்கள் !

பொருளாதாரம் 5 மில்லியன் டன்னாக உயரும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

நாட்டின் பொருளாதாரத்தை டன் கணக்கில் அளவிட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா - அதிர்ச்சியில் உறைந்த மக்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2025ம் ஆண்டுக்குள் இந்தியாவின் பொருளாதாரம் 5 ட்ரில்லியன் டாலராக உயரும் என மோடி அரசின் அமைச்சரவை சகாக்கள் அவ்வப்போது தெரிவித்து வருகின்றனர். முந்தைய பட்ஜெட் கூட்டத்தின் போதும் மத்திய நிதியமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமன் இதையே குறிப்பிட்டு நிதிநிலை அறிக்கையை வாசித்தார்.

ஆனால், நாட்டின் பொருளாதாரமோ அதள பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, கடுமையான சரிவை சந்தித்து வருகிறது. அதற்கு உதாரணமாக நாட்டில் சில்லறை பணவீக்கம் 7.59 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

இவ்வளவு இன்னல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதும் தனது மதவாத அரசியலையே நடத்தி வருகிறது பா.ஜ.க. அரசு. இந்நிலையில், டைம்ஸ் நவ் நாளிதழின் மாநாட்டில் பங்கேற்று இந்திய பொருளாதாரம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது.

அதில், இந்தியாவின் பொருளாதாரம் 2025க்குள் 5 ட்ரில்லியன் டாலராக உயரும் எனும் கூற்றுக்கு பதில், “ஏற்கெனவே 3 மில்லியன் ’டன்’ என வகுத்திருந்த திட்டத்தின் அடிப்படையில் 5 மில்லியன் ’டன்’ இலக்கை நோக்கை நகர்ந்துக் கொண்டிருக்கிறோம்” என அமித்ஷா பேசியுள்ளா.

இதனையடுத்து அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் வருத்தெடுத்து வருகிறார்கள். முன்னதாக, காங்கிரஸின் ரோஹன் குப்தா “இனி ஜி.டி.பி. மில்லியன் டன் அடிப்படையில் கணக்கிடப்படும்; இது பா.ஜ.கவின் புதுமையான கண்டுபிடிப்பு” எனக் குறிப்பிட்டு அமித்ஷாவை விமர்சித்திருந்தார்.

இன்னும் சிலர், புத்திசாலித்தனமான பேச்சு. அமித்ஷா வாட்ஸ் அப் பள்ளியில் படித்திருந்ததால் அது மில்லியன் டன் ஆகியுள்ளது என கிண்டலடித்து வருகின்றனர்.

மறுபக்கம், இந்த அளவீடுகள் கூட தெரியாத ஒருவர் உள்துறை அமைச்சர் பதவியில் இருப்பது வேதனை அளிப்பதாக இருக்கிறதும் என்றும் வருத்தத்தோடு பதிவிட்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories