இந்தியா

காதலர் தின கொண்டாட்டம் : OYO-வில் 90% அளவுக்கு எகிறிய முன்பதிவு!

உலகம் முழுவதும் காதலர் தின கொண்டாட்ட வேளையில் OYO-வில் 90.57% ஹோட்டல் ரூம் புக்கிங் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காதலர் தின கொண்டாட்டம் : OYO-வில் 90% அளவுக்கு எகிறிய முன்பதிவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகம் முழுவதும் நாளை காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலைக் கொண்டாட உலக காதலர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் காதலர் தினத்தை, வெளியூர்களுக்குப் பயணம் சென்று கொண்டாடுவதற்கு நாடுமுழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் அதிகளவில் OYO ஹோட்டல் ரூம்களில் முன்பதிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது.

சமீபகாலமாக நிதி நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வந்த தங்கும் விடுதிகள் இந்த வாரத்தில் மீண்டும் புத்துணர்வு அடைந்துள்ளதாக அந்நிறுவன ஊழியர்கள் கூறுகின்றனர்.

காதலர் தின கொண்டாட்டம் : OYO-வில் 90% அளவுக்கு எகிறிய முன்பதிவு!

இதுவரையும், வழக்கத்தை விட அதிகமாக 90.57% சதவீத ரூம்கள் புக் செய்யப்பட்டிருப்பதாகவும், அதில் மும்பை, கொல்கத்தா போன்ற மாநகரங்களில் அதிகமான ரூம் புக்கிங் நடந்திருப்பதாகவும் கூறுகிறது OYO.

மேலும் காதலர் தினத்தை எதிர்க்கும் வகையில் இந்துத்வா உள்ளிட்ட அடிப்படைவாத கும்பல்கள், பொது இடங்களில் காதலர்களைத் துன்புறுத்தி வருவதால், OYO Rooms போல தங்களுக்கென பிரைவஸியான இடங்களை காதலர்கள் தேர்ந்தேடுக்கின்றனர் எனவும் கூறப்படுகிறது.

OYO நிறுவனம் சமூக வலைதளங்களில் #StayInLove, #ValentinesTogetherAlone மற்றும் #CheckInForLove போன்ற ஹேஷ்டாக்குகளை உருவாக்கி காதலர் தினத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறது.

banner

Related Stories

Related Stories