இந்தியா

தலைசுற்ற வைக்கும் பட்ஜெட் மோசடி: “இதுதான் உங்கள் பட்ஜெட்டா?” - ஜெயரஞ்சன் மிரட்டல் பேச்சு!

குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருப்பதைப் பற்றியும், மதிய உணவுத்திட்டத்தை பற்றியும் இந்த அரசாங்கத்திற்கு கவலை இல்லையென பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் குற்றம் சாட்டியுள்ளார்.

தலைசுற்ற வைக்கும் பட்ஜெட் மோசடி: “இதுதான் உங்கள் பட்ஜெட்டா?” -  ஜெயரஞ்சன் மிரட்டல் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியாவில் 11 ஆண்டுகளில் இல்லாத மந்தநிலைக்குச் சென்ற நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் விதமாக பட்ஜெட்டாக இருக்கும் என்ற பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் நேற்றைய தினம் சுமார் 2 மணி நேரம் 42 நிமிடங்கள் பட்ஜெட் அறிக்கையை வாசித்து முடித்துள்ளார்.

இந்த பட்ஜெட் பல்வேறு சிக்கலும், நடுதர, ஏழை மக்களின் வாழ்கையில் பெரும் சுமையை ஏற்படுத்தியதாக பொருளாதார வல்லுநர்கள் கூறிவருகின்றனர். அதுமட்டுமின்றி பள்ளி மாணவர்கள், விவசாயிகள், சிறுகுறு தொழிலாளர்கள் யாருக்குமே இந்த பட்ஜெட் பயனளிக்கவில்லை என்று கூறுகின்றனர்.

இந்நிலையில் பட்ஜெட் தொடர்பாக தனியார் டி.வி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பொருளதார அறிஞர் ஜெயரஞ்சன் இந்த பட்ஜெட்டின் மோசமான பல அம்சங்களை சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.

தலைசுற்ற வைக்கும் பட்ஜெட் மோசடி: “இதுதான் உங்கள் பட்ஜெட்டா?” -  ஜெயரஞ்சன் மிரட்டல் பேச்சு!

அதில், மாநில அரசின் மூலம் மத்திய அரசுக்கு வரும் வருவாயில் 8 லட்சத்து 9 ஆயிரம் கோடி ரூபாய் தொகையை மாநில அரசுக்கு கொடுக்கவேண்டும் என நிதிக்குழு பரிந்துரைத்துள்ளது. ஆனால் தற்போது கொடுத்திருப்பது வெறும் 6 லட்சத்து 56 ஆயிரம் கோடிதான். இதன் மூலம் மாநில அரசுக்கு வரவேண்டிய தொகை 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் மாநில அரசுக்கு கிடைக்கவில்லை.

மாநில அரசுகள் தான் மக்களுக்கு உண்டான நல வாரியம் நடத்துக்கிறது. அப்படி இருக்கையில் பொருளாதார பிரச்சனை வருகிற போது மாநில அரசிடம் ஆலோசனை பெறாமல், பல்வேறு சலுகைகளையும், கடன் தள்ளுபடிகளையும் முதலாளிகளுக்கு அறிவித்துவிடும் வேலையை மத்திய அரசு செய்துள்ளது.

அதுமட்டுமின்றி, உணவு மானியத்திலும் இந்த அரசாங்கம் கைவைத்துள்ளது. குறிப்பாக 1 லட்சத்து 92 ஆயிரம் கோடி கொடுக்கவேண்டிய இடத்தில் 1 லட்சத்து 15 ஆயிரம் கோடி மட்டுமே கொடுத்துள்ளார்கள்.

தலைசுற்ற வைக்கும் பட்ஜெட் மோசடி: “இதுதான் உங்கள் பட்ஜெட்டா?” -  ஜெயரஞ்சன் மிரட்டல் பேச்சு!

இதைவிட கொடுமை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் என்று சொல்லக்கூடிய குழந்தைகள் ஊட்டச்சத்தினை உறுதிப்படுத்தும் திட்டத்தில் 27 ஆயிரம் கோடி நிதியில் இருந்து 22 ஆயிரம் கோடி ரூபாயை வெட்டித் தூக்கியுள்ளனர். இதனை எந்த அரசாங்காமாவது மேற்கொள்ளுமா? என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், குழந்தைகள் தவிர்த்து பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவந்த மதிய உணவிலும் கை வைத்துள்ளார்கள். இலவச மதிய உணவுத் திட்டத்தில் (Midday Meal Scheme) 11 ஆயிரம் கோடியில் இருந்து 9 ஆயிரம் கோடியாக குறைத்துள்ளன.

அதற்கு அடுத்ததாக விவசாயத்துறைக்கு ஒதுக்கப்பட்ட மதிப்பீடு தொகை 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி, திருத்தப்பட்ட மதிப்பீடு 1 லட்சத்து 1000 கோடி. இதில் முழுக்கணக்கு வெளிவரும் போதுதான் இதன் பாதகம் அம்பலப்படும். குறிப்பாக மார்ச் மாதம் முடியும் இந்த கணக்கு அடுத்த பட்ஜெட் வரும் போது உண்மையான மதிப்பீடு என்ன என்பது தெரியவரும்.

தலைசுற்ற வைக்கும் பட்ஜெட் மோசடி: “இதுதான் உங்கள் பட்ஜெட்டா?” -  ஜெயரஞ்சன் மிரட்டல் பேச்சு!

அரசு நினைத்தால் திருத்தப்பட்ட மதிப்பீட்டை அதிகமாக கூட வைத்துக்கொள்ளாலம் அது காலத்திற்கு ஏற்றவாறு தவறுகளை மறைப்பதற்கு, ஆனால் கணக்கு விவரங்கள் வெளிவரும் போதுதான் தெரியும் விவசாயத்துறைக்கு ஒதுக்கப்பட்ட இந்த நிதியை என்ன செய்தார்கள் என்று.

இந்த பிரச்சனைகள் தொடரும் இந்த வேலையில், காஷ்மீரில் விளையும் ஆப்பிள்களை உடனே எடுத்துச் செல்வதற்கு 19 ஆயிரத்து 950 கோடி திருத்தப்பட்ட மதிப்பீட்டை வெளியிட்டுள்ளனர். மாநில அரசுகளுக்கு வழங்கவேண்டிய நிதியை அங்கு கொடுத்துள்ளார்.

இதன் மூலம் அரசின் முக்கியத்துவம் எதில் இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருப்பதைப் பற்றியும், மதிய உணவுத்திட்டத்தை பற்றியும் ஏன் விவசாயத்துறையின் வீழ்ச்சிப்பற்றியும் இந்த அரசிற்கு கவலை கிடையாது. மாநில அரசு நிதி சிக்கலில் தவிப்பது பற்றியும் கவலையில்லை.” என ஜெயரஞ்சன் பேசியுள்ளார்.

இவர்களின் தேவை எல்லாம் காஷ்மீர் அப்பிள் நேரடியாக தங்களின் கைக்கு வரவேண்டும் என்பதற்காக 5 ஆயிரம் கோடியில் இருந்து 20 கோடி செலவு செய்வீர்களா? இதுதான் உங்கள் பட்ஜெட்டா? இதையெல்லாம் சொல்லவந்தால் பட்ஜெட்டே தேவையில்லை என கைது விடுகிறீர்கள் என ஆவேசமாக பேசினார்.அவரின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

banner

Related Stories

Related Stories