இந்தியா

இந்த முறையும் தேறாத பட்ஜெட்டா? - மத்திய பட்ஜெட் உரையின் அம்சங்கள் என்னென்ன?

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2020-2021ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள்.

இந்த முறையும் தேறாத பட்ஜெட்டா? - மத்திய பட்ஜெட் உரையின் அம்சங்கள் என்னென்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாடாளுமன்றத்தில் இன்று 2020-2021ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.

பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள் :

இந்தியாவின் பொருளாதாரத்தை ஒருங்கிணைக்கும் வகையில் ஜி.எஸ்.டி வரி முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் வாங்கும் திறனையும், நிதி நிலையையும் மேம்படுத்தும் வகையில் இந்த பட்ஜெட் இருக்கும்.

உலகிலேயே ஐந்தாவது பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. 2006 - 2016ம் ஆண்டுக்குள் 27 கோடி பேர் வறுமைக்கோட்டிலிருந்து வெளிவந்துள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளில் வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையில் புதிதாக 15 லட்சம் பேர் இணைந்துள்ளனர்.

இந்த முறையும் தேறாத பட்ஜெட்டா? - மத்திய பட்ஜெட் உரையின் அம்சங்கள் என்னென்ன?

விவசாயம்:

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்படும். 2022-ம் ஆண்டுக்குள் வருவாயை இரட்டிப்பாக்குவதே அரசின் இலக்கு.

நவீன முறை விவசாயத்தால் வேளாண் உற்பத்தி அதிகரித்துள்ளது. விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்க 16 திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

20 லட்சம் விவசாயிகளுக்கு சூரிய ஒளியில் இயங்கும் மின் மோட்டார் வாங்க நிதியுதவி அளிக்கப்படும்.

15 லட்சம் விவசாயிகளுக்கு சோலார் மின் வசதி செய்து கொடுக்கப்படும்.

பண்ணைத் தொழிலை தனியார் நிறுவனங்கள் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தரிசு நிலங்களில் சூரிய மின்னுற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

பால், பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவற்றை கொண்டு செல்ல தனி ‘விவசாயி’ ரயில் இயக்கப்படும்.

இறைச்சி, மீன் உள்ளிட்ட உணவுகளை கொண்டுச் செல்ல ரயிலில் பிரத்யேக ஏ.சி பெட்டிகள் இணைக்கப்படும்.

விளைபொருட்களைக் கொண்டு செல்ல தனி விமானம் இயக்கப்படும்.

விவசாயிகளுக்கு கடன் வழங்க 15 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

அடுத்த 5 ஆண்டுகளில் பால் உற்பத்தி இரட்டிப்பாக்கப்படும். சுய உதவிக் குழுக்கள் மூலம் கிராமங்களில் விவசாயக் கிடங்குகள் அமைக்க அனுமதிக்கப்படும்.

விவசாயத்துறைக்கு பட்ஜெட்டில் 2.83 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மீன் உற்பத்தியை 200 லட்சம் டன்னாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த முறையும் தேறாத பட்ஜெட்டா? - மத்திய பட்ஜெட் உரையின் அம்சங்கள் என்னென்ன?

சுகாதாரத்துறை:

சுகாதாரத்தை பேண தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்படும்.

சுகாதாரத்துறைக்கு 69,000 கோடி ரூபாய் கூடுதலாக நிதி ஒதுக்கப்படும்.

கல்வி:

கல்வித்துறைக்கு 93,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

மாணவ, மாணவிகளுக்கு தரமான கல்வி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

150 புதிய கல்வி நிறுவனங்கள் தொடங்கப்படும்.

புதிதாக தேசிய காவல்துறை மற்றும் தடயவியல் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படும்.

தனியாருடன் இணைந்து மாவட்டந்தோறும் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்படும்.

புதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அதிகளவில் உருவாக்கப்படுவார்கள்.

கல்வித்துறையில் நேரடி அந்நிய முதலீடு அனுமதிக்கப்படும்.

மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் உயர்கல்வி பயில்கின்றனர்.

திறன் மேம்பாடு:

திறன் மேம்பாட்டுக்கு 3,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

இந்தியாவின் வணிகம், தொழில் உள்ளிட்டவை மேம்படுத்தப்படும்.

இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். முதலீட்டாளர்களுக்கு சலுகைகளும், உதவிகளும் வழங்கப்படும்.

இந்த முறையும் தேறாத பட்ஜெட்டா? - மத்திய பட்ஜெட் உரையின் அம்சங்கள் என்னென்ன?

மின்சாதனப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களும், மருத்துவ சாதனங்களை உருவாக்கும் நிறுவனங்களும் ஊக்குவிக்கப்படும்.

ஜவுளித்துறைக்கு 1,480 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

குடிநீர் வளத்திட்டங்களுக்கு 3.6 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு.

தொழில்துறையை ஊக்குவிக்க 27, 300 கோடி ஒதுக்கீடு.

ரயில்வே துறை :

27,000 கிலோ மீட்டர் ரயில்வே இருப்புப்பாதைகள் மின்மயமாக்கப்படும்.

சுற்றுலாத்தளங்களை இணைக்க தேஜாஸ் ரயில்கள் இயக்கப்படும்.

மின்சாரம் :

மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கு 22 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு.

ஸ்மார்ட் மின் மீட்டர், பிரீபெய்டு மின் மீட்டர்கள் திட்டம் கொண்டுவரப்படும்.

கிராமங்களில் உள்ள தபால் நிலையங்கள், காவல் நிலையங்கள் டிஜிட்டல் முறையில் இணைக்கப்படும்.

நாடுமுழுவதும் தகவல் மைய பூங்காக்கள் அமைக்கப்படும். அதற்கான புதிய கொள்கை உருவாக்கப்படும்.

பாரத் நெட் திட்டத்திற்கு ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

தனியார் பங்களிப்புடன் தரவு மையப் பூங்காக்கள் அமைக்க விரைவில் திட்டம் வகுக்கப்படும்.

இந்த முறையும் தேறாத பட்ஜெட்டா? - மத்திய பட்ஜெட் உரையின் அம்சங்கள் என்னென்ன?

ஊட்டச்சத்து திட்டங்களுக்கு ரூ.35,6000 கோடி ஒதுக்கப்படும். பெண்களின் மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.28,600 கோடி ஒதுக்கப்படும்.

நாடுமுழுவதும் கூடுதலாக 100 மாவட்டங்களில் ஆயுஷ்மான் பாரத் மருத்துவமனைகள் அமைக்கப்படும்.

மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலநிலை முடிவுக்கு கொண்டுவரப்படும். மனித கழிவுகளை அகற்ற புதிய தொழில்நுட்பம் கொண்டுவரப்படும்.

தூய்மை இந்தியா திட்டத்துக்கு ரூ.12,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தொல்லியல் சிறப்பு வாய்ந்த 5 இடங்களில் தொல்லியல் துறை அகழாய்வுகள் மேம்படுத்தப்படும்.

தூத்துக்குடி மாவட்ட ஆதிச்சநல்லூரில் தொல்லியல் துறை சார்பில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

இந்த முறையும் தேறாத பட்ஜெட்டா? - மத்திய பட்ஜெட் உரையின் அம்சங்கள் என்னென்ன?

பிறதுறைகள்:

எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கான திட்டங்களுக்காக ரூ.85 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

பண்பாட்டு மற்றும் கலாச்சாரத் துறைக்கு ரூ.3,150 கோடி ஒதுக்கீடு.

சுற்றுலா வளர்ச்சிக்காக மாநில அரசுகளுக்கு ரூ.2,50 கோடி ஒதுக்கீடு.

சுத்தமான காற்று கிடைப்பதற்கு ரூ.4,400 கோடி ஒதுக்கப்படும்.

ஜம்மு காஷ்மீர் வளர்ச்சிக்கு ரூ 30,757 கோடி நிதி ஒதுக்கப்படும்.

லடாக் யூனியன் பிரதேச வளர்ச்சிக்கு ரூ.5,958 கோடி ஒதுக்கீடு

நாடுமுழுவதும் கூடுதலாக 100 மாவட்டங்களில் ஆயுஷ்மான் பாரத் மருத்துவமனைகள் அமைக்கப்படும்.

ஜி-20 மாநாடு நடத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு.

இந்த முறையும் தேறாத பட்ஜெட்டா? - மத்திய பட்ஜெட் உரையின் அம்சங்கள் என்னென்ன?

பொதுத்துறை:

வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் தொகைகளுக்கு காப்பீடு அதிகரிக்கப்படும்.

டெபாசிட் தொகைக்களுக்கான காப்பீடு தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்வு.

மத்திய அரசிடம் உள்ள IDBI வங்கி பங்குகளை விற்க முடிவு.

LIC-யில் மத்திய அரசின் பங்குகள் விற்பனை செய்யப்படும்.

பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ3.50 லட்சம் கோடி ஒதுக்கீடு.

வருமான வரி :

தனிநபர் வருமான வளர்ச்சி 10 சதவீதமாக இருக்கும் என மதிப்பீடு

தனிநபர் வருமான வரி குறைப்பு. புதிதாக அறிவிக்கப்பட்டிருக்கும் முறையில் வருமான வரி செலுத்தும்போது சலுகைகள் கோர முடியாது என்பது நிபந்தனை.

2.5 லட்சம் - 5 லட்சம் வரை - 5% (மொத்த வருமானத்தில் 2.5 லட்சம் கழித்து) + 4% செஸ்

5 லட்சம் - 7.5 லட்சம் - 10%

7.5 லட்சம் - 10 லட்சம் - 15%

10 லட்சம் - 12.5 லட்சம் - 20%

12.5 லட்சம் - 15 லட்சம் - 25%

15 லட்சத்துக்கு மேல் - 30%

2021 மத்திய பட்ஜெட் பற்றாக்குறை 3.8 சதவீதமாக இருக்கும் என மதிப்பீடு.

பட்ஜெட்டில் எதிர்பார்த்த திட்டங்கள் இல்லாததால் பங்குச்சந்தைகளில் சரிவு.

banner

Related Stories

Related Stories