இந்தியா

தீவிரவாதிகளுக்கு உதவிய போலிஸ்: மோடி-ஷா மெளனம் காப்பது ஏன்? - ராகுல் காந்தி கேள்வி!

காஷ்மீர் டிஎஸ்பி தாவிந்தர் சிங் கைது செய்யப்பட்டது தொடர்பாக பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார் ராகுல்காந்தி.

தீவிரவாதிகளுக்கு உதவிய போலிஸ்: மோடி-ஷா மெளனம் காப்பது ஏன்? - ராகுல் காந்தி கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த டி.எஸ்.பி. தாவிந்தர் சிங் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் கருத்து தெரிவிக்காதது ஏன் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 11ம் தேதி காஷ்மீரின் ஸ்ரீநகர் - ஜம்மு நெடுஞ்சாலையில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகள் மூவருடன் காரில் பயணித்த டி.எஸ்.பி. தாவிந்தர் சிங் அண்மையில் கைது செய்யப்பட்டார். சிறந்த காவல்துறை அதிகாரி என்று குடியரசுத்தலைவரிடம் இருந்து விருது பெற்ற இந்த அதிகாரி, தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த விருது அவரிடம் இருந்து திரும்பப் பெறப்பட்டது.

மேலும், அவரது வீட்டில் நடத்திய சோதனையில் ஏ.கே.47 ரக துப்பாக்கியும், இரண்டு கைத்துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

தீவிரவாதிகளுக்கு உதவிய போலிஸ்: மோடி-ஷா மெளனம் காப்பது ஏன்? - ராகுல் காந்தி கேள்வி!

கைது செய்யப்பட்ட டி.எஸ்.பி., கடந்த வாரம் ஜம்மு-காஷ்மீர் விமான நிலைய பாதுகாப்பு பணியில் இருந்ததால், விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். குடியரசு தின விழாவை சீர்குலைக்கும் வகையில் திட்டமிட்டிருந்த ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகளுக்கு டி.எஸ்.பி., தாவிந்தர் சிங் அடைக்கலம் கொடுத்ததும் தெரிய வந்துள்ளது.

இதற்கு முன்பு, நாடாளுமன்றத்தில் தீவிரவாத தாக்குதல் நடைபெற்றதற்கு மூளையாக செயல்பட்ட அப்சல் குருவுக்கும், இதே டி.எஸ்.பி. உதவியாக இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், ராகுல்காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், டி.எஸ்.பி. கைது விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் பதிலளிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தீவிரவாதிகளுடன் டி.எஸ்.பி.க்கு உள்ள தொடர்பு குறித்து விரைவு நீதிமன்றத்தில் விசாரித்து 6 மாதங்களில் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இதுமட்டுமல்லாமல், புல்வாமா தாக்குதலில் தாவிந்தர் சிங்கின் பங்கு என்ன? இன்னும் எத்தனை தீவிரவாதிகளுக்கு அவர் உதவி செய்துள்ளார், தாவிந்தர் சிங்கை யார் பாதுகாத்து வருவது? எதற்காக என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பி ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளார் ராகுல் காந்தி.

இதேபோல, பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஜம்மு-காஷ்மீர் டி.எஸ்.பி. கைது விவகாரம் இந்தியாவின் பாதுகாப்பு குறித்த சந்தேகத்தை எழுப்புகிறது. மேலும், தாவிந்தர் சிங் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories