இந்தியா

“ரூபாய் நோட்டில் இந்து கடவுள்” - சு.சுவாமி நிதியமைச்சரானால் இந்தியாவின் நிலை? - கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

லஷ்மி படத்துடன் அச்சிட்டால் இந்திய ரூபாயின் மதிப்பு உயரும் என சுப்பிரமணியன் சுவாமி பேசியிருப்பதற்கு நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

“ரூபாய் நோட்டில் இந்து கடவுள்” - சு.சுவாமி நிதியமைச்சரானால் இந்தியாவின் நிலை? - கலாய்க்கும் நெட்டிசன்ஸ்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்தியில் ஆட்சியமைத்து வரும் பாஜக அரசு மேற்கொண்ட தவறான பொருளாதார கொள்கையால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வரலாறு காணாத வகையில் அதள பாதாளத்திற்கு சென்றிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதனால் விலைவாசி உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி என பல்வேறு இடர்பாடுகள் தொடர்ந்து வந்தன. இந்நிலையில், ஈரான் - அமெரிக்கா இடையே மூண்ட போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணியின் விலை உயர்ந்து வந்தது. இதன் தாக்கத்தால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவை சந்தித்து வருகிறது.

இந்நிலையில், அண்மையில் மத்திய பிரதேசத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி, “இந்தோனேஷிய நாட்டு கரன்சியில் விநாயகரின் படம் அச்சிடப்பட்டிருக்கும். அது போல இந்திய ரூபாய் நோட்டில் லஷ்மியின் அச்சிட்டால் நாட்டின் பணவீக்கம் தீர்ந்து டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் உயரும்” என பேசியுள்ளார்.

banner

Related Stories

Related Stories