இந்தியா

ஜே.என்.யூ வன்முறையில் சந்தேகிக்கப்படும் பட்டியலை வெளியிட்ட காவல்துறை - மாணவர்கள் அதிர்ச்சி!

ஜே.என்.யூ-வில் தாக்குதல் நடத்தியவர்களின் புகைப்படங்களை டெல்லி போலிஸார் வெளியிட்டுள்ளனர். அதில் மாணவர் சங்கத் தலைவர் ஆயிஷ் கோஷின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.

ஜே.என்.யூ வன்முறையில் சந்தேகிக்கப்படும் பட்டியலை வெளியிட்ட காவல்துறை - மாணவர்கள் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஜே.என்.யூ-வில் தாக்குதல் நடத்தியவர்களின் புகைப்படங்களை டெல்லி போலிஸார் வெளியிட்டுள்ளனர். அதில் மாணவர் சங்கத் தலைவர் ஆயிஷ் கோஷின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை முகமூடி அணிந்த மர்ம நபர்கள் மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தினர். இந்த கொடூரத் தாக்குதலில் பல மாணவர்கள் படுகாயமடைந்தனர்.

ஜே.என்.யூ மாணவர் சங்கத் தலைவர் ஆயிஷ் கோஷ் உள்ளிட்ட பலர் இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்தனர். இந்தத் தாக்குதல் ஆர்.எஸ்.எஸ்ஸின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி அமைப்பினரால் நடத்தப்பட்டது அம்பலமானது.

ஜே.என்.யூ வன்முறையில் சந்தேகிக்கப்படும் பட்டியலை வெளியிட்ட காவல்துறை - மாணவர்கள் அதிர்ச்சி!

மாணவர்கள் மீதான இந்தத் தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், ஜனநாயக அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்தத் தாக்குதலைக் கண்டித்து நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ஜே.என்.யூ.வில் நடந்த வன்முறைச் சம்பவங்களில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 9 பேரின் புகைப்படங்களை இன்று டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ளது.

Police Name Student Leader Aishe Ghosh, Others For Attack At JNU Hostel

காவல்துறை வெளியிட்ட அந்தப் பட்டியலில் மாணவர் சங்கத் தலைவர் ஆயிஷ் கோஷின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. கொடூரமான தாக்குதலுக்கு உள்ளான ஆயிஷ் கோஷின் புகைப்படமும் தாக்கியவர்களாக சந்தேகிக்கப்படும் பட்டியலில் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாக்குதல் நடைபெற்ற பிறகு ஏ.பி.வி.பி அமைப்பினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பாதிக்கப்பட்ட மாணவர்கள் மீதே வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தற்போது, தாக்குதலுக்கு உள்ளானவர்களையே குற்றவாளிகள் என நிரூபிக்க டெல்லி காவல்துறை முயற்சி மேற்கொண்டு வருவதாக பலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

ஜே.என்.யூ வன்முறையில் சந்தேகிக்கப்படும் பட்டியலை வெளியிட்ட காவல்துறை - மாணவர்கள் அதிர்ச்சி!

இதுகுறித்து ஆயிஷ் கோஷ் கூறுகையில், “டெல்லி போலிஸார் அவர்கள் விசாரணையை தொடரட்டும். நான் எப்படி தாக்கப்பட்டேன் என்பதைக் காட்ட என்னிடமும் ஆதாரம் உள்ளது. எந்த அடிப்படையில் போலிஸார் இதை வெளியிட்டுள்ளனர் எனத் தெரியவில்லை. நான் எந்தத் தவறும் செய்யவில்லை. எதற்கும் அஞ்சப்போவதில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories