இந்தியா

தீபிகா படுகோனுக்கு எதிராக ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து மீண்டும் அசிங்கப்பட்ட சங்கிகள்!

ஜே.என்.யூ மாணவர்களுக்கு ஆதரவளித்ததால் தீபிகா படுகோனின் ‘சப்பாக்’ படத்தை புறக்கணிப்பதாக ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யும் பா.ஜ.கவினர்.

தீபிகா படுகோனுக்கு எதிராக ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து மீண்டும் அசிங்கப்பட்ட சங்கிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டெல்லி ஜே.என்.யூ மாணவர்கள் மீது இந்துத்வா கும்பல் நடத்திய தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான பிறகும் மாணவர்கள் தங்களை போராட்டத்தில் ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.

தீபிகா படுகோனுக்கு எதிராக ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து மீண்டும் அசிங்கப்பட்ட சங்கிகள்!

ஜே.என்.யூ மாணவர்களின் இந்த போராட்டத்துக்கு அனுராக் காஷ்யப் முதற்கொண்டு பாலிவுட் பிரபலங்கள் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் ஜே.என்.யூ மாணவர்களின் போராட்டத்துக்கு நேரில் ஆதரவு தெரிவித்தது மிகப் பெரியளவில் வரவேற்பை பெற்று வருகிறது.

தீபிகா படுகோனுக்கு எதிராக ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து மீண்டும் அசிங்கப்பட்ட சங்கிகள்!

இதனையடுத்து தீபிகாவின் செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. அதேவேளையில் தீபிகாவின் ‘சப்பாக்’ படம் நாளை மறுநாள் ரிலீஸாகவுள்ள நிலையில் அதற்கு விளம்பரம் தேடுவதற்காகவே இவ்வாறு போராட்டத்துக்கு வந்துள்ளார் என கொச்சைப்படுத்தும் விதமாக பா.ஜ.கவினரும், அதன் ஐ.டி.விங்கும் #BoycottChhapaak என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

தீபிகா படுகோனுக்கு எதிராக ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து மீண்டும் அசிங்கப்பட்ட சங்கிகள்!

அதில், ‘சப்பாக்’ படத்துக்கு செய்யப்பட்ட முன் பதிவுகளையும் கேன்சல் செய்து வரும் போட்டோக்களையும் பதிவிட்டு வருகின்றனர் பா.ஜ.கவினர். ஆனால், அதிலும் வழக்கம் போல் தில்லுமுல்லுகளில் ஈடுபட்டுள்ளது பா.ஜ.க.

என்னவெனில், டிக்கெட்டை ரத்து செய்த ஒருவருடைய Screenshot-ஐ எடுத்து பலர் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில், தாங்களும் டிக்கெட்டை ரத்து செய்ததாகப் பகிர்ந்து வருகின்றனர். இதுவரை இந்த ஒரு Screenshot-ஐ வைத்துக்கொண்டு நூற்றுக்கணக்கானோர் தீபிகாவின் ‘சப்பாக்’ படத்தின் டிக்கெட்டை கேன்சல் செய்துவிட்டதாக பதிவிட்டுள்ளனர். இதுமட்டுமல்லாமல் தீபிகாவின் சமூக வலைதள பக்கங்களை Unfollow அல்லது Report செய்வதற்கு பதிலாக block செய்து வருகின்றனர்.

இதற்கு நெட்டிசன்கள் பலர் Block செய்தால் என்ன ஆகும், Report அல்லது UnFollow செய்தால் என்ன ஆகும் என்று கூட தெரியாதவர்கள்தான் பா.ஜ.கவில் இருக்கிறார்கள் என கலாய்த்து வருகின்றனர்.

இதற்கிடையே, தீபிகா படுகோனுக்கு ஆதரவளிக்கும் வகையில் #ISupportDeepika என்ற ஹேஷ்டேக்கையும் அவரது ரசிகர்கள் பலர் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories