இந்தியா

“பொருளாதார சரிவு ஒன்றும் சாதாரண அளவில் இல்லை” : மோடியின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் எச்சரிக்கை!

இந்தியாவின் பொருளாதார சரிவு சாதாரண அளவில் இல்லை, இது மிகப்பெரிய பொருளாதார மந்தநிலை என மோடியின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் நாடு இதுவரை சந்திக்காத அளவுக்கு பொருளாதார வீழ்ச்சி அதிகரித்துள்ளது. குறிப்பாக ஜி.எஸ்.டி வரி குறைவு, ஜி.டி.பி சரிவு போன்ற பல்வேறு காரணிகளால் இந்தியாவின் பொருளாதாரம் சீரழிந்து வருகிறது.

இந்நிலையில் இந்திய நாட்டின் பொருளாதார சரிவு சாதாரண அளவில் இல்லை, இது மிகப்பெரிய பொருளாதார மந்தநிலை என நரேந்திர மோடி அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் ஆங்கில ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்தப் பேட்டியில், “தற்போது நிலவும் பொருளாதாரத் தேக்கநிலை, அரசாங்கத்தின் தரவுகளின்படி இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த ஏழு ஆண்டுகளாக பின்னோக்கிச் சென்றுள்ளது.

குறிப்பாக முக்கிய மதிப்பீடுகள் எதிர்மறையான வளர்ச்சியில் உள்ளனர். வளர்ச்சி, முதலீடு, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி துறையே வேலைவாய்ப்புகளுக்கு முக்கியமானது. ஆனால் அந்தத் துறைகள் தற்போது சரிந்துள்ளன.

உண்மையில் பொருளாதாரம் மந்தமாகிறது. வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன. மக்களின் வருமானம் வெகுவாகக் குறைந்து வருகிறது. இது ஒரு சாதாரண மந்தநிலை அல்ல. இது இந்தியாவில் ஏற்பட்டுள்ள மிகப்பெரும் மந்தநிலை” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories