இந்தியா

“நகைச்சுவை எழுத்தாளரான எனது வாழ்விலிருந்து சிரிப்பு நீங்கியது”-பத்மஸ்ரீ விருதை திருப்பியளித்த எழுத்தாளர்!

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பத்மஸ்ரீ விருதை திருப்பி அளித்துள்ள உருது எழுத்தாளர் முஸ்தபா, “நகைச்சுவை எழுத்தாளரான எனது வாழ்விலிருந்து சிரிப்பு நீங்கிவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

“நகைச்சுவை எழுத்தாளரான எனது வாழ்விலிருந்து சிரிப்பு நீங்கியது”-பத்மஸ்ரீ விருதை திருப்பியளித்த எழுத்தாளர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க கடந்த ஆட்சியில் நிறைவேற்ற முடியாமல் போன குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை, தற்போது பெரும்பான்மை பலத்துடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதாவிற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

மேலும், குடியுரிமைச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுமுழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டத்தின் போது பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் போராட்டக்காரர்கள் மீது போலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சூழலில் உருது மொழிபெயர்ப்பாளரும், மூத்த எழுத்தாளரும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் முன்னாள் உருது துறைத் தலைவருமான பேராசிரியர் யாகூப் யாவர், உத்தர பிரதேச உருது அகாடமியிலிருந்து பெற்ற அகாடமி விருதினை திருப்பித் தருவதாக கடந்த வாரம் அறிவித்தார்.

“நகைச்சுவை எழுத்தாளரான எனது வாழ்விலிருந்து சிரிப்பு நீங்கியது”-பத்மஸ்ரீ விருதை திருப்பியளித்த எழுத்தாளர்!

எழுத்தாளர்கள் பலர், தங்களின் எதிர்ப்பைக் காட்டும் விதமாக, அரசு வழங்கிய விருதுகளை திருப்பி அளித்துவருகின்றனர். இதனையடுத்து திரைக் கலைஞர்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் மோடி அரசுக்கு தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் உருது மொழி எழுத்தாளர் முஸ்தபா உசேனும் இந்த மசோதாவுக்கு தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். அதை வெளிப்படுத்தும் விதமாக, தனக்கு வழங்கப்பட்ட ‘பத்மஸ்ரீ’ விருதை திருப்பி அளிக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எழுத்தாளர் முஸ்தபா உசேன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “நாட்டில் அச்சம் மற்றும் வெறுப்பு நிறைந்த சூழலை நாம் அனுபவித்து வருகிறோம். இதனால் நான் மூச்சுத் திணறுகிறேன். என் மனசாட்சி என்னைக் குத்துகிறது.

இதற்கு மேலும் என்னால் அமைதியாக இருக்கமுடியாது. எனவே பத்மஸ்ரீ விருதை திருப்பிக் கொடுக்க முடிவு செய்துள்ளேன். நகைச்சுவை எழுத்தாளரான எனது வாழ்க்கையில் இருந்து சிரிப்பு நீங்கிவிட்டது” என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories