இந்தியா

#CAB2019 : ராணுவக் குவிப்பு, இணைய சேவை ரத்து - அசாமை அடுத்த காஷ்மீராக மாற்றுகிறதா மோடி அரசு?

அசாம் மாநிலத்தில் இணைய சேவையை துண்டித்து ராணுவத்தினரை குவித்துள்ளது அம்மாநில மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது

#CAB2019 : ராணுவக் குவிப்பு, இணைய சேவை ரத்து - அசாமை அடுத்த காஷ்மீராக மாற்றுகிறதா மோடி அரசு?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு குடியேறும் இஸ்லாமியர்கள் அல்லாத மக்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய பா.ஜ.க அரசு குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியுள்ளது.

இது அப்பட்டமான மதவாத செயல் என எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், திருத்தப்பட்ட குடியுரிமை மசோதாவால் வடகிழக்கு மாநில மக்கள் பெருவாரியாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மோடி அரசின் புதிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் மக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அசாமின் முக்கிய மாவட்டங்களின் சாலைகளில் மறியல் செய்தும், வாகனங்களை தீயிட்டு எரித்தும் மக்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மக்களின் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் அசாம் மற்றும் திரிபுராவில் ஆயிரக்கணக்கான ராணுவ படைகள் குவிக்கப்பட்டுள்ளன்ன.

#CAB2019 : ராணுவக் குவிப்பு, இணைய சேவை ரத்து - அசாமை அடுத்த காஷ்மீராக மாற்றுகிறதா மோடி அரசு?

மேலும், ரயில் சேவை ரத்து மற்றும் அசாமின் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசின் மீதான அம்மாநில மக்களின் ஆத்திரம் இன்னும் மேலோங்கியுள்ளது.

முன்னதாக கடந்த ஆக.,5ம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவை ரத்து செய்து பா.ஜ.க அரசு உத்தரவிட்டதை அடுத்து, அங்கு துணை ராணுவத்தை குவித்து மக்கள் மற்றும் அரசியல் தலைவர்களை வீட்டுச் சிறையில் அடைத்தது மட்டுமல்லாமல் அனைத்து தொலைதொடர்பு சேவைகளையும் முடக்கியது. 100 நாட்களை தாண்டியும் ஜம்மு மற்றும் காஷ்மீர் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. மக்கள் அச்சத்துடன் தான் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் காஷ்மீர் அமைதி பள்ளத்தாக்காக இருக்கிறது என மத்திய அரசு நாடகமாடி வருகிறது. வாயை வலுக்கட்டாயமாக மூடிவிட்டு அமைதியாக இருக்கிறது என்ற கேலிக் கூத்தைத் தான் அரங்கேற்றி வருகிறது பா.ஜ.க அரசு.

அதுபோல, தற்போது சிறுபான்மையினர்களுக்கு எதிரான குடியுரிமை மசோதா நிறைவேற்றம், மக்களின் போராட்டம் மற்றும் ராணுவக் குவிப்பு, இணைய சேவை துண்டிப்பு என இவை அனைத்தும் மற்றுமொரு காஷ்மீராக, அசாம் மாநிலத்தை ஒடுக்க மோடி நினைக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. எதிர்ப்புக் குரல்களை ஒடுக்குவது தான் ஜனநாயகம் என்ற பாசிச கொள்கையுடன் செயல்பட்டு வரும் மோடி அரசின் அடுத்த இலக்கு வட கிழக்கு மாநிலங்கள் என சமூக ஆர்வலர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா கொண்டு வரும் மசோதாக்கள் அனைத்தும் சிறுபான்மை மக்கள் பிரதானமாக வசிக்கும் காஷ்மீர், வட கிழக்கு போன்ற மாநிலங்களை குறிவைத்தே இருப்பதில் இருந்து புரிந்து கொள்ளலாம், பா.ஜ.க அரசின் நோக்கத்தை.

banner

Related Stories

Related Stories