இந்தியா

குடியுரிமை மசோதாவுக்கு எதிராக வெடித்த போராட்டம் - அசாமில் இயல்புநிலை கடுமையாக பாதிப்பு !

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் உள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் நேற்றிலிருந்து தீவிரமடைந்து வருகிறது.

குடியுரிமை மசோதாவுக்கு எதிராக வெடித்த போராட்டம் - அசாமில் இயல்புநிலை கடுமையாக பாதிப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே நாடாளுமன்றத்தின் மக்களவையில் நேற்று நிறைவேறியது. இந்த மசோதாவிற்கு காங்கிரஸ், தி.மு.க, இடதுசாரி எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனிடையே, அசாம் மாநிலம் கவுஹாத்தி பகுதி மக்கள் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக்கூடாது என வலியுறுத்தி ஒருவார காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த மசோதா மக்களவையில் நிறைவேறியதை அடுத்து, அதைத் திரும்பப் பெற வலியுறுத்தி கவுஹாத்தி பகுதியில் நேற்றிலிருந்தே போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கிவிட்டன. இந்தப் போராட்டத்தை வடகிழக்கு மாநில மாணவர் சங்கமும், அனைத்து அசாம் மாணவர் அமைப்பும் கையில் எடுத்துள்ளது.

அப்போது மாணவர் அமைப்பின் சார்பில் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்திற்கு ஆதரவளித்து கவுஹாத்தி, கோலாகட், திப்ருகர் உள்ளிட்ட இடங்களில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு பகுதிகளில் மக்கள் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

குடியுரிமை மசோதாவுக்கு எதிராக வெடித்த போராட்டம் - அசாமில் இயல்புநிலை கடுமையாக பாதிப்பு !

இந்நிலையில் இந்தப் போராட்டம் குறித்து வடகிழக்கு மாநில மாணவர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், “மோடி அரசாங்கம் கொண்டுவந்துள்ள சட்டம் சிறுபான்மையின சமூகத்துக்கு எதிராக உள்ளது. இதனால் சிறுபான்மையினர் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

இன்று நடைபெற்ற போராட்டத்தில் மக்கள் குடும்பமாக கலந்துகொண்டு அரசுக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர். இந்த மசோதாவை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும். மத்திய அரசுக்கு எதிராக எங்கள் போராட்டத்தை இன்னும் தீவிரப்படுத்த முடிவு செய்து இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தப் போராட்டத்தின் காரணமாக அசாம் மாநிலத்தின் பல பகுதிகளில் பேருந்துகள், வாகனங்கள் இயக்கப்படாததால் கவுஹாத்தியில் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மேலும் போராட்டங்கள் வலுத்து வருவதால் கவுஹாத்தியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், துணை ராணுவப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories