இந்தியா

ராகுலின் ஆங்கிலப் பேச்சை மலையாளத்தில் மொழிபெயர்த்த 12ம் வகுப்பு மாணவி : ராகுல் கொடுத்த ஆச்சர்ய பரிசு !

ராகுல் காந்தியின் பேச்சை மலையாளத்தில் மொழிபெயர்த்த 12-ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

ராகுலின் ஆங்கிலப் பேச்சை மலையாளத்தில் மொழிபெயர்த்த 12ம் வகுப்பு மாணவி : ராகுல் கொடுத்த ஆச்சர்ய பரிசு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதியின் எம்.பி.,யுமான ராகுல் காந்தி மூன்று நாள் பயணமாக கேரளா வந்துள்ளார். இன்று காலை தொகுதிக்கு உட்பட்ட கருவாராக்குண்டு கிராமத்தில் உள்ள பள்ளியின் புதிய கட்டிடத்தை ராகுல் காந்தி திறந்து வைத்தார்.

இதனையடுத்து அங்கு கூடி இருந்த மாணவர்களிடையே உரையாடத் தொடங்கினார். வழக்கமாக ராகுல் காந்தியின் பேச்சை காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தான் மொழிப்பெயர்த்து பேசுவது தான் வழக்கம்.

ஆனால், இன்று நடந்த சம்பவம் பலரையும் ஆச்சர்யப்பட வைத்தது. ராகுல் தனது பேச்சை தொடங்குவதற்கு முன்னர் அங்குள்ள மாணவர்கள் யாராவது தனது பேச்சை மலையாளத்தில் மொழிபெயர்க்கத் தயாரா? என்று கேள்வி எழுப்பினார். அப்போது அந்தப் பள்ளியில் படிக்கும் 12ம் வகுப்பு மாணவி ஸபா பெபின் தைரியமாக மேடைக்கு வந்தார்.

இதனையடுத்து ராகுல் ஆங்கிலத்தில் பேசியதை, மாணவர்கள் மத்தியில் ஸபா பெபின் மலையாளத்தில் தெளிவாக மொழிப்பெயர்த்து பேசினார். ஸபாவின் மொழிப்பெயர்ப்பை பாராட்டிய ராகுல் காந்தி அவருக்கு சாக்லேட் கொடுத்தார்.

ராகுலின் ஆங்கிலப் பேச்சை மலையாளத்தில் மொழிபெயர்த்த 12ம் வகுப்பு மாணவி : ராகுல் கொடுத்த ஆச்சர்ய பரிசு !

இதுகுறித்து மாணவி ஸபா கூறுகையில், ”ராகுல் காந்தியுடன் ஒரே மேடையைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்புக் கிடைத்தது. எனக்கு கொஞ்சம் பதற்றமாக இருந்தது. இருப்பினும், ராகுல் காந்தி எளிய வார்த்தைகளைப் பேசி என் வேலையை எளிதாக்கினார். கடைசியில் ராகுல் காந்தி என்னைப் பாராட்டியது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தியின் பேச்சை மூத்த அரசியல்வாதிகளே மொழிப்பெயர்க்க சிரமப்படும் நிலையில் சிறுமி ஸபா சிரமமின்றி மொழிபெயர்த்தார். சிறுமி ஸபா பெபினுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories