இந்தியா

உச்ச நீதிமன்றத்தின் கிரீமிலேயர் முறைக்கு எதிர்ப்பு: மறு ஆய்வுக்கோரி மத்திய அரசு மனு!

தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு

உச்ச நீதிமன்றத்தின் கிரீமிலேயர் முறைக்கு எதிர்ப்பு: மறு ஆய்வுக்கோரி மத்திய அரசு மனு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் சமுதாயத்தைச் சேர்ந்த பொருளாதார ரீதியாக முன்னேறியவா்களுக்கு மேற்படிப்பிலும், வேலை வாய்ப்புகளிலும் இடஒதுக்கீடு அளிக்கக்கூடாது என உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமா்வு கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது.

இத்தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு மீதான பரிசீலனை, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் பி.ஆர். கவாய், சூரியகாந்த், ஆகியோா் அடங்கிய அமா்வு முன் நேற்று நடைபெற்றது.

அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞா் கே.கே.வேணுகோபால் , ‘‘தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினருக்கு ‘கிரீமிலேயா்’ முறையை அடிப்படையாகக் கொண்டு இடஒதுக்கீட்டை மறுக்கக் கூடாது. இது உணா்வுப்பூா்வமான பிரச்னை.

எனவே, இந்த விவகாரத்தை 7 நீதிபதிகள் கொண்ட அமா்வுக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என வாதிட்டார். இதையடுத்து, வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்கள் கழித்து பட்டியலிடுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

banner

Related Stories

Related Stories