இந்தியா

விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய தமிழருக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு!

விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய சண்முக சுப்பிரமணியனை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய தமிழருக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நிலவில் விழுந்து கண்களுக்குப் புலப்படாமல் இருந்த விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய சண்முக சுப்பிரமணியனை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

நிலவின் தெந்துருவப் பகுதியில் ஆய்வு செய்வதற்காக ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகிய 3 பகுதிகளை உள்ளடக்கிய சந்திரயான் 2 விண்கலத்தை இஸ்ரோ கடந்த ஜூன் 22-ம் தேதி விண்ணுக்கு அனுப்பியது.

ஆர்பிட்டரில் இருந்து பிரிந்து, நிலவின் சுற்றுவட்டப்பாதையை நெருங்கும்போது சுமார் 2.1 கி.மீ தொலைவில் தகவல் தொடர்பை இழந்தது விக்ரம் லேண்டர். விக்ரம் லேண்டருக்கும் இஸ்ரோ தரை கட்டுப்பாட்டு நிலையத்துக்கும் இடையேயான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

விக்ரம் லேண்டருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. தொடர்ந்து லேண்டரின் செயல்பாடு குறித்து ஆர்பிட்டரின் துணையுடன் கண்காணித்து வந்தனர்.

விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய தமிழருக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு!

இருப்பினும், அந்த முயற்சிகள் பலனளிக்காததால் நாசாவின் உதவியை நாடியது இஸ்ரோ. ஆனால், நாசா முயற்சித்தும் விக்ரம் லேண்டர் தேடலில் முன்னேற்றம் இல்லை. இந்த நிலையில், விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளது நாசா.

மேலும், விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தில் இருந்து வடமேற்கு திசையில் 750 மீட்டர் தொலைவில் அதன் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது. இதற்கு தமிழர் ஒருவர் பின்னணியாகச் செயல்பட்டுள்ளார்.

நாசாவின் செயற்கைக்கோள் எடுத்த நிலவின் புகைப்படங்களை மதுரையை சேர்ந்த சண்முக சுப்பிரமணியன் தொடர்ந்து ஆய்வு செய்து விக்ரம் லேண்டரின் பாகங்களை கண்டறிந்தார். இதை நாசாவுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளார். இதையடுத்து சுப்பிரமணியனின் ஆய்வை அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகளும் உறுதி செய்தனர்.

இந்நிலையில், விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க, நாசாவிற்கு உதவி புரிந்து, தமிழர்களைப் பெருமை கொள்ளச் செய்துள்ள சண்முக சுப்பிரமணியனுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பல நாட்கள் உழைப்பிற்குப் பிறகு நாசாவின் புகைப்படத்தை ஆராய்ந்து விக்ரம் லேண்டரை கண்டுபிடித்துள்ளார். அதை நாசாவும் உறுதி செய்து அவரை பாராட்டியுள்ளது. சண்முக சுப்பிரமணியனின் எதிர்காலம் சிறக்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories