இந்தியா

மகாராஷ்டிர அரசியல் குழப்பம் : குதிரை பேரத்திலிருந்து எம்.எல்.ஏக்களை காப்பாற்றப் போராடிவரும் கட்சிகள்!

சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் ஆளுநரைச் சந்தித்துள்ளனர்.

மகாராஷ்டிர அரசியல் குழப்பம் : குதிரை பேரத்திலிருந்து எம்.எல்.ஏக்களை காப்பாற்றப் போராடிவரும் கட்சிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மகாராஷ்டிர அரசியலில் பல்வேறு குழப்பங்களுக்கிடையே பா.ஜ.க-வின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் துணை முதல்வராகவும் திடீரென பதவியேற்றனர். தேசியவாத காங். எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுக் கடிதத்தை அஜித் பவார் ஆளுநரிடம் அளித்து ஆட்சியமைத்துள்ளார்.

இதையடுத்து, தேசியவாத காங். தலைவர் சரத் பவார் ஏற்பாட்டின் பேரில் அந்தக் கட்சியின் எம்.எல்.ஏக்கள் மும்பையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தேசியவாத காங்கிரஸுக்கு மொத்தம் 54 எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்களில் அஜித் பவாருக்கு ஆதரவாகச் செயல்படும் சில எம்.எல்.ஏக்களையும் தன் பக்கம் இழுக்க சரத் பவார் முயற்சி செய்து வருகிறார்.

குதிரை பேரத்தை தடுக்க, காங்கிரஸ் கட்சி தனது எம்.எல்.ஏக்களை ஜெய்ப்பூருக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போதைய அவசர சூழல் காரணமாக மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலிலேயே காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிர அரசியல் குழப்பம் : குதிரை பேரத்திலிருந்து எம்.எல்.ஏக்களை காப்பாற்றப் போராடிவரும் கட்சிகள்!

சிவசேனாவின் எம்.எல்.ஏக்கள் விமான நிலையம் அருகில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களை அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று சந்தித்துப் பேசினார். மேலும் சரத் பவாருக்கு ஆதரவளிக்கும் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்களையும் உத்தவ் தாக்கரே ஓட்டலில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இதற்கிடையே, பா.ஜ.க மூத்த தலைவரும் அந்த கட்சியின் எம்.பியுமான சஞ்சய் காகடே, தேசியவாத காங். தலைவர் சரத் பவாரை நேற்று மும்பையில் சந்தித்துப் பேசினார். மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், இன்று சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் ஆளுநரைச் சந்தித்துள்ளனர். உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது பரபரப்பை அதிகரித்துள்ளது.

banner

Related Stories

Related Stories