இந்தியா

‘பா.ஜ.க - தேசியவாத காங்கிரஸ் திடீர் கூட்டணி’: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் திக்..திக்.. திருப்பங்கள்!

பா.ஜ.க-விற்கு ஆதரவு அளித்தது அஜித் பவாரின் தனிப்பட்ட முடிவு. அஜித் பவாரின் இந்த முடிவிற்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவளிக்காது என சரத் பவார் தெரிவித்துள்ளார்.

‘பா.ஜ.க - தேசியவாத காங்கிரஸ் திடீர் கூட்டணி’: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் திக்..திக்.. திருப்பங்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மகாராஷ்டிராவில் தேர்தலுக்கு பிறகு ஆட்சியமைக்க பா.ஜ.க - சிவசேனா கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்த போதிலும், முதல்வர் பதவி தொடர்பான மோதல் காரணமாக பா.ஜ.க உடனான கூட்டணியை சிவசேனா முறித்துக் கொண்டதால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்தது.

பின்னர், ஆட்சி அமைப்பதில் பா.ஜ.கவை தவிர்த்து மற்ற கட்சிகளுக்கு ஆளுநர் போதிய அவகாசம் வழங்காமல் அவசரகதியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்தினார். இதற்கிடையில், பா.ஜ.க கூட்டணியில் இருந்து வெளியேறிய சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸுடன் இணைந்து ஆட்சியமைக்க பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

ஆனால், திடீர் திருப்பமாக பா.ஜ.க - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. இதனால் பா.ஜ.கவின் தேவேந்திர பட்நாவிஸ் மீண்டும் முதல்வராக பதவியேற்றார். தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றுள்ளார். முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவருக்கும் ஆளுநர் பகத்சிங் கோஷியாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மஹாராஷ்டிரா முதல்வராக பதவியேற்பார் என்று தேசியவாத காங்கிரஸ் நேற்று அறிவித்த நிலையில் இன்று பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து சரத் பவார் ட்விட்டரில் தெரிவித்திருப்பதாவது, “பா.ஜ.க-விற்கு ஆதரவு அளித்தது அஜித் பவாரின் தனிப்பட்ட முடிவு. அஜித் பவாரின் இந்த முடிவிற்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவளிக்காது” என்று பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து இதுகுறித்து பா.ஜ.க விளக்கம் அளித்துள்ளது. அதில், தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ-கள் ஆதரவுக் கடிதம் அளித்ததாலேயே ஆட்சி அமைத்தோம்” என தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories