இந்தியா

‘கையை வைத்து கண்ணை குத்தியது’- தேசியவாத காங்கிரஸையும், சரத்பவார் குடும்பத்தையும் சிதைத்த பா.ஜ.க! 

மகராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியையும், சரத்பவார் குடும்பத்தையும் பா.ஜ.க பிளவுபடுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தந்தை சரத்பவாருடன் மகள் சுப்ரியா சுலே. அடுத்த படம் : அஜித் பவார்.
தந்தை சரத்பவாருடன் மகள் சுப்ரியா சுலே. அடுத்த படம் : அஜித் பவார்.
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக, பாஜக-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு இன்று பொறுப்பேற்றுள்ளது. முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிசும், துணை முதல்வராக தேசியவாத காங்கிரசின் அஜித் பவாரும் பதவியேற்றுள்ளனர். அஜித்பவார், சரத் பவாரின் மூத்த அண்ணன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கடந்த 10 நாட்களாக அமலில் இருந்த ஜனாதிபதி ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

சிவசேனா தலைமையில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையின் முடிவில், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவை முதல்-மந்திரியாக ஏற்க கருத்து ஒற்றுமை ஏற்பட்டுள்ளதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நேற்று இரவு தெரிவித்திருந்தார். ஆனால் பொழுது விடிந்ததும் நிலைமை தலைகீழாக மாறியது.

‘கையை வைத்து கண்ணை குத்தியது’- தேசியவாத காங்கிரஸையும், சரத்பவார் குடும்பத்தையும் சிதைத்த பா.ஜ.க! 

இதன்காரணமாக தேசியவாத காங்கிரசையும், சரத்பவார் குடும்பத்தையும் பிளவுபட வைத்தள்ளது பா.ஜ.க. மகாராஷ்டிராவில் அஜித்பவார், பா.ஜ.க., ஆட்சியில் துணைமுதல்வராக பதவியேற்றது குறித்து, சரத்பவார் மகள் சுப்ரியா சுலேவிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, அஜித்பவார் ஒரு துரோகி ஆகிவிட்டார் என்ற கடும் ஆவேசத்துடன் கூறியுள்ளார்.

மகாராஷ்டிராவில் இருந்து பா.ஜ.க.,வை விரட்ட சிவசேனாவுடன் கூட்டணி சேருவதில் தவறு இல்லை என்ற முடிவில் சரத்பவாரும், சுப்ரியா சுலேவும் இருந்தனர். ஆனால், அஜித்பவார் சில சொந்த காரணங்களுக்காக பா.ஜ.க.,வை ஆதரிக்கிறார்.

மேலும், சரத்பவாருக்கு அடுத்தபடியாக சுப்ரியா சுலே வளர்ந்து வருவதால் தனக்கான இடம் கேள்விகுறி ஆக்கப்படுவதாகவும் அஜித்பவார் அச்சத்தில் இருந்தால் அதனால் இந்த முடிவை எடுத்தார் என்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளால் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

சுப்ரியா சுலே ‘வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்’
சுப்ரியா சுலே ‘வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்’

ஆனால், பா.ஜ.க., தேசியவாத காங்கிரசையும், சரத்பவார் குடும்பத்தையும் பிளவுப்படுத்தி சிதைத்துள்ளதே உண்மை என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

அஜித்பவாரின் இந்த செயலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து தனது மகள் சுப்ரியா சுலே மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள், பிரபுல் படேல், அஜோன் பூஜ்பால், ரோஹித் பவார் ஆகியோருடன் சரத்பவார் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறாராம்.

இதனிடைய சுப்ரியா சுலே, தனது கட்சியிலும், குடும்பத்திலும் பிளவு ஏற்பட்டுவிட்டது என்று கூறி தனது வாட்ஸ் அப்பில் நிலைத் தகவலை பதிந்துள்ளார். இந்த நிலைத்தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories