இந்தியா

“கல்யாணம் பண்றாங்க; ரயில்ல கூட்டமா இருக்கு; பொருளாதாரம் நல்லா இருக்கு’’-மத்திய அமைச்சர் பேச்சால் சர்ச்சை!

இந்தியாவில் பொருளாதார மந்தநிலை இல்லை என மத்திய ரயில்வே துறை இணையமைச்சர் சுரேஷ் அங்காடி தெரிவித்துள்ளார்.

“கல்யாணம் பண்றாங்க; ரயில்ல கூட்டமா இருக்கு; பொருளாதாரம் நல்லா இருக்கு’’-மத்திய அமைச்சர் பேச்சால் சர்ச்சை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் நாட்டின் பொருளாதாரம் கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவில் மோசமான நிதி நெருக்கடியில் இந்தியா சிக்கித் தவிப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆட்டோமொபைல், உணவு உற்பத்தி உள்ளிட்ட நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஜி.எஸ்.டி வரி விதிப்பால் விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளதால் அசோக் லேலண்ட், மாருதி, மஹிந்திரா, போஷ் இந்தியா போன்ற பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி வருகின்றன.

இந்நிலையில் நாட்டில் பொருளாதார மந்தநிலை இல்லை எனவும், பொருளாதாரம் நன்றாக உள்ளது எனவும் மத்திய ரயில்வே துறை இணையமைச்சர் சுரேஷ் அங்காடி கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அதற்கு அவர் கூறிய காரணம் வினோதமாக உள்ளது.

“கல்யாணம் பண்றாங்க; ரயில்ல கூட்டமா இருக்கு; பொருளாதாரம் நல்லா இருக்கு’’-மத்திய அமைச்சர் பேச்சால் சர்ச்சை!

உத்தர பிரதேசத்தில் செய்தியாளர்களை சந்தித்த சுரேஷ் அங்காடி, விமானங்கள், ரயில்கள் அனைத்தும் பயணிகளால் நிரம்பி வருகிறது. மக்கள் திருமணம் செய்துகொள்கிறார்கள். இவை நாட்டின் பொருளாதாரம் நன்றாக உள்ளது என்பதையே காட்டுகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்பதற்காகவே சிலர் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துவிட்டதாக கூறுகிறார்கள். 3 வருடங்களுக்கு ஒருமுறை பொருளாதார வளர்ச்சியில் ஒரு தேக்கநிலை ஏற்படும். அதன்பின்னர் பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கி செல்லும்'' எனத் தெரிவித்துள்ளார்.

வீழ்ச்சியடைந்த இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க முயற்சிக்காமல் பா.ஜ.க அமைச்சர்கள் பொருளாதாரம் நன்றாக உள்ளது என தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருவது மக்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

banner

Related Stories

Related Stories