இந்தியா

மகாராஷ்டிரா: ஆட்சியமைப்பதில் இருந்து பின்வாங்கிய பாஜக; சிவசேனாவை அழைத்த ஆளுநர்!

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க ஆளுநர் கோஷ்யாரி அழைப்பு விடுத்த நிலையில், பெரும்பான்மைக்கு போதிய பலம் தங்களிடம் இல்லையென பா.ஜ.க. அறிவித்துள்ளது.

மகாராஷ்டிரா: ஆட்சியமைப்பதில் இருந்து பின்வாங்கிய பாஜக; சிவசேனாவை அழைத்த ஆளுநர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மகாராஷ்டிர மாநிலத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கடந்த அக்.,24ம் தேதி வெளியிடப்பட்டது. இதில், கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜகவும் சிவசேனாவும் 105, 56 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மேலும், தேசியவாத காங்கிரஸ் 54ம், காங்கிரஸ் 44 தொகுதிகளிலும் வெற்றியடைந்தன.

ஆட்சி அமைக்க எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க போதிய பெரும்பான்மை இருந்தும் பாஜக-சிவசேனா இடையே முதலமைச்சர் பதவிக்காக கடுமையான மோதல் நிலவி வருகிறது.

மகாராஷ்டிரா: ஆட்சியமைப்பதில் இருந்து பின்வாங்கிய பாஜக; சிவசேனாவை அழைத்த ஆளுநர்!

இதனால் அம்மாநிலத்தில் எந்தக் கட்சி ஆட்சியமைக்கப் போகிறது என்ற சிக்கல் இதுகாறும் நீடித்து வருகிறது. இதனிடையே, 105 தொகுதிகளில் வென்றுள்ள பாஜக ஆட்சி அமைப்பதற்காக தேவேந்திர ஃபட்னாவிசுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த நிலையில், பாஜக மூத்த தலைவர்களுடன் தேவேந்திர ஃபட்னாவிஸ் இல்லத்தில் இன்று (நவ.,10) காலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன் பிறகு ஆளுநருடனான சந்திப்பு நிகழ்ந்தது. இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிர மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டில், மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க பாஜகவால் இயலவில்லை என தெரிவித்தார்.

மகாராஷ்டிரா: ஆட்சியமைப்பதில் இருந்து பின்வாங்கிய பாஜக; சிவசேனாவை அழைத்த ஆளுநர்!

போதிய பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைக்கப் போவதில்லை எனக் கூறிய சந்திரகாந்த் பாட்டில், மற்றக் கட்சிகளுடன் இணைந்து சிவசேனா ஆட்சி அமைத்தால் அதற்கு வாழ்த்துகளையும் கூறினார்.

இவ்வாறு இருக்கையில், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க சிவசேனாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி. 2வது தனிப்பெரும் கட்சியாக சிவசேனா உள்ளதால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆட்சி அமைப்பது குறித்து நாளை காலை 7.30 மணிக்குள் முடிவை தெரிவிக்கவேண்டும் என சிவசேனாவுக்கு ஆளுநர் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா: ஆட்சியமைப்பதில் இருந்து பின்வாங்கிய பாஜக; சிவசேனாவை அழைத்த ஆளுநர்!

இருப்பினும் சிவசேனாவுக்கும் போதிய பெரும்பான்மை இல்லாததால் பாஜகவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி முதலமைச்சர் பதவியை பெருகிறதா அல்லது மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கப்போகிறதா என்ற குழப்பம் நீடிக்கிறது.

banner

Related Stories

Related Stories