இந்தியா

தொழிலாளர்களின் உரிமையை நசுக்குகிறதா மோடி அரசு? : பணி நேரத்தை 9 மணிநேரமாக மாற்ற பா.ஜ.க அரசு திட்டம்!

இந்தியாவில் தொழிலாளர்களுக்கான வேலை நேரத்தை 9 மணி நேரமாக அதிகரிக்க பா.ஜ.க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு தொழிற்சங்கங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தொழிலாளர்களின் உரிமையை நசுக்குகிறதா மோடி அரசு? : பணி நேரத்தை 9 மணிநேரமாக மாற்ற பா.ஜ.க அரசு திட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு ஆட்சி அதிகாரத்திற்கு வந்த நாள் முதல் ஏழை நடுத்தர மக்களின் வளர்ச்சியை மேம்படுத்தாமல், கார்ப்பரேட் முதலாளிகளின் நலன்களிலேயே அதிக அக்கறைகாட்டுவதாக அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

குறிப்பாக, பா.ஜ.க இரண்டாம் முறையாகப் பொறுப்பேற்றபிறகு கடும் பொருளாதார சரிவை இந்தியா சந்தித்து வருகிறது. அதனால் வருவாய் இல்லாமல் சிறு-குறு தொழில் நிறுவனங்கள் கடும் இன்னல்களைச் சந்திந்தித்தன. அதேபோல் பெருநிறுவனங்களும் வருவாய் இழப்பை அடைந்தனர். இந்நிலையில் பா.ஜ.க அரசு, பொருளாதாரத்தை சரி செய்ய வரிசலுகை அளித்தது. அதனால் அதிகம் லாபம் அடைந்தது கார்ப்பரேட் முதலாளிகளே.

இந்நிலையில் அவர்களுக்கு சாதமாகவும், தொழிலாளர்களுக்கு எதிராகவும் ஒரு சட்டத்தைக் கொண்டுவரத் துடிக்கிறது. அதாவது, இந்தியாவில் தொழிலாளர்களுக்கான வேலை நேரத்தை 9 மணி நேரமாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, வரைவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மத்திய அரசு, தங்களின் இந்த திட்டம் குறித்து, டிசம்பர்1-ம் தேதிக்குள் தொழிலாளர்களும் பொதுமக்களும் கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளது.

இந்தியாவில் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை 18 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் மற்றும் ஜனநாயக கட்சிகள் நீண்டகாலமாக போராடி வருகின்றன. இந்நிலையில் ‘தொழிலாளர்களுக்கான ஊதிய விதிமுறைகள் குறித்த வரைவு’ என்ற பெயரில், மத்திய தொழிலாளர்துறை சார்பில் மத்திய அரசு அறிக்கை ஒன்றை பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடுள்ளது.

தொழிலாளர்களின் உரிமையை நசுக்குகிறதா மோடி அரசு? : பணி நேரத்தை 9 மணிநேரமாக மாற்ற பா.ஜ.க அரசு திட்டம்!

அந்த அறிக்கையில், தொழிலாளர்கள் வேலைநேரத்தை 9 மணிநேரமாக அதிகரிக்கும் திட்டத்தை முன்வைத்துள்ளது. அறிக்கையின் தலைப்போ, ஊதிய விதிமுறைகள் குறித்த வரைவு அறிக்கை. ஆனால், அதுதொடர்பாக குறிப்பான உத்தரவாதம் எதையும் அளிக்காமல், வேலைநேரத்தை அதிகரிப்போம் என்பதை மட்டும் முதன்மைப்படுத்தி மோடி அரசு தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், எதிர்காலத்தில் ஊதியத்தை நிர்ணயிப்பதற்கு மூன்று புவியியல் வகைப்பாடுகளை கருத்தில் கொள்ளவேண்டும் என்று பரிந்துரை ஒன்றையும் அதில் வைத்துள்ளது. அதாவது, 40 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட பெருநகரப் பகுதி, 10 லட்சம் முதல் 40 லட்சம் வரை மக்கள் தொகை கொண்ட பெருநகரமற்ற பகுதி மற்றும் கிராமப்புறங்கள் என்று மூன்று புவியியல் பிரிவுகளாக கணக்கிட்டு ஊதியம் நிர்ணயம் செய்யப்படும் என கூறுகிறது.

அதேபோல், எரிபொருள், மின்சாரம் ஆகியவற்றுக்கான செலவீனங்கள் குறைந்தபட்ச வருமானத்திலிருந்து 20 சதவிகிதம் இருக்கவேண்டும். குழந்தைகளுக்கான படிப்பு, மருத்துவச் செலவுகள் குறைந்தபட்ச வருமானத்தில் 25 சதவிகிதம் இருக்கவேண்டும் என்றெல்லாம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எரிபொருள், மின்சாரம் மற்றும் பிறஇதர பொருட்களுக்கான செலவு, குறைந்தபட்ச ஊதியத்தில் 20 சதவிகிதத்தை கொண்டிருக்கும் என்பது ஏற்கனவே உள்ள விதியாகும். அதுவே மீண்டும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல ஒரு நாளைக்கு 2,700 கலோரிகள், ஒரு நிலையான குடும்பத்திற்கு ஆண்டுக்கு 66 மீட்டர் துணி ஆகியவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று வரைவு விதி கூறுகிறது. இவையும் 1957-இல் முதலில் செய்யப்பட்ட குறைந்தபட்ச ஊதியக் கணக்கீட்டில் இருப்பதுதான். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், வேலைநேர அதிகரிப்பை மட்டுமே பிரதானமாக கொண்டு, மோடி அரசு தனது வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

தொழிலாளர்களின் உரிமையை நசுக்குகிறதா மோடி அரசு? : பணி நேரத்தை 9 மணிநேரமாக மாற்ற பா.ஜ.க அரசு திட்டம்!

மேலும், ஒரு சாதாரண வேலை நாள் என்பது 9 மணி நேரம் கொண்டதாக இருக்கும் என்று வரைவு விதியில் கூறப்பட்டுள்ளது. ஆனால், மாதச் சம்பளத்திற்கான வரையறுப்பில், ஒரு மாதத்தில் 26 வேலை நாட்களில், அன்றாடம் எட்டு மணிநேரப் பணி மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தொழிற்சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், “மோடி அரசு தொழிலாளர்களை வதைக்க நினைக்கிறது. ஏதோ தன்னிடம் ஆட்சி உள்ளது என நினைத்த சட்டத்தைக் கொண்டுவரலாம் என நினைக்கிறது.

குறிப்பாக,வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 9 மணிநேரமாக அதிகரிக்க முயற்சி செய்கிறது. 8 மணி நேரம் வேலை என்பது போகிறபோக்கில் அரசு வழங்கிய சலுகையல்ல. உலக நாடுகளின் வரலாற்றை திருத்தி எழுதிய போராட்டங்களின் விளைவாக கிடைத்த உரிமையை யாராலும் பறிக்கமுடியாது. பறிக்க நினைத்தால் மிகப்பெரிய பின்னடைவை மோடி அரசாங்கம் சந்திக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உளவியல் நிபுணர் ஒருவர் இதுகுறித்து கூறுகையில், இதுகுறித்து கூறுகையில், “உலகில் மென்பொருள் உற்பத்தியில் மிகப்பெரிய நிறுவனமாக செயல்பட்டுவரும் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஜப்பானில் உள்ள தனது ஊழியர்களின் மாத விடுமுறை நாட்களை அதிகரித்துள்ளது. அதாவது வாரத்திற்கு 4 நாட்கள் மட்டும் வேலை பார்த்தால் போதும் என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த தொடங்கியுள்ளது.

தொழிலாளர்களின் உரிமையை நசுக்குகிறதா மோடி அரசு? : பணி நேரத்தை 9 மணிநேரமாக மாற்ற பா.ஜ.க அரசு திட்டம்!

வார விடுமுறையில் கூடுதலாக வெள்ளிக்கிழமையும் விடுமுறை அளித்தது. இதனை கடந்த ஆகஸ்ட் மாதம் பரிசோதனை செய்துள்ளது. மேலும் விடுமுறை அளித்த மாதத்தில், முன்பு இருந்த உற்பத்தி திறனைவிட 40 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, வேலை நேரங்களில் வெளியில் செல்லும் நேரம் 25 சதவீதம் மிச்சமாகியுள்ளதாகவும், அதேபோல் மின்சாரப் பயன்பாட்டில் 23 சதவீதம் மிச்சமாகியிருப்பதாவும் ஒவ்வொன்றாக பட்டியலிட்டுள்ளது. கூடுதல் விடுமுறை என்பதால் முன்பைவிட வேலை அதிகரித்துள்ளதாகவும், இந்த திட்டத்திற்கு 92 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளதாகவும் கூறியுள்ளது.

இதன் மூலம் வேலை, ஓய்வு, ஆரோக்கியமான வாழ்வு என எந்தவித பிரச்னையும் இல்லாமல் வாழமுடியும். ஆனால் இந்தியாவில் தற்போது 8 மணிநேரம் வேலை என்று இருக்கும்போது, 10 முதல் 14 மணி நேரம் வரையிலும் வேலை வாங்குகிறார்கள்.

இதனால் இந்திய தொழிலாளர்கள் கடும் மன உளைச்சலை சந்திக்கின்றனர். இதனால் ஏற்படும் பாதிப்புகளை அரசு உணரவேண்டும்.” எனக் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories