இந்தியா

‘வீட்டு தங்கத்துக்கு ஆபத்து’  - ரசீது இல்லாத நகைகளுக்கு அபராத வரி வசூலிக்க மோடி அரசு முடிவு!

மக்கள் ரசீது இல்லாமல் வைத்திருக்கும் தங்கத்திற்கு அதிகபட்ச அபராத வரியை வசூலிக்க, நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

‘வீட்டு தங்கத்துக்கு ஆபத்து’  - ரசீது இல்லாத நகைகளுக்கு அபராத வரி வசூலிக்க மோடி அரசு முடிவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்தியில் ஆட்சி செய்யும் நரேந்திர மோடி அரசு கடந்த 2016-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கை மிகப் பெரிய தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில், பணமதிப்பு நீக்க நடவடிக்கையைப் போன்று, ரசீது இல்லாமல் வைத்திருக்கும் தங்கத்திற்கு அபராத வரியை வசூலிக்கும் நடவடிக்கையை தீவிரமாக செயல்படுத்தவும் மோடி அரசு தீர்மானித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்படி கணக்கில் வராத தங்கம் வைத்திருக்கும் தனி நபர்கள், தாங்களாகவே அவற்றின் கணக்கு வழக்குகளை ஒப்படைத்தாக வேண்டும். தானாகவே, முன்வருபவர்களுக்கு குறைந்தபட்ச அபராதவரி விதிக்கப்படும். மாறாக, கணக்கிடப்பட்ட வரம்பை மீறி தங்கம் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

பணமதிப்பு நீக்கத்தின்போது, கறுப்புப் பணம் வைத்திருந்தவர்கள், அதனை தங்கமாக மாற்றிக் கொண்டதாகவும், அதனைக் கண்டுபிடிக்கும் வகையிலேயே இந்த திட்டத்தை ‘யோசித்து’ மோடி அரசு கொண்டு வந்திருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இதனிடையே, ரிசர்வ் வங்கி தனது கையிருப்பில் உள்ள தங்கத்தில், 151 கோடி டாலர் மதிப்பிலான தங்கத்தை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தியை ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது.

அக்டோபர் 18-ம் தேதி நிலவரப்படி ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு 1.91 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதனால் நடுத்தரமக்களின் சிறுசேமிப்பு என்ன முறையே முற்றிலும் அழியக்கூடும் என பொருளாதார வல்லுநர்கள் கருத்துத்தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories