இந்தியா

‘மொபைல்போனுக்கு பதில் மார்பிள் கல்’ : ஆன்லைன் மோசடியில் சிக்கிய பாஜக எம்.பி., - அதிர்ச்சித் தகவல்!

மத்திய பா.ஜ.க எம்.பி., காகன் முர்முவிடம் ஆன்லைன் மோசடி கும்பல் கைவரிசையைக் காட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘மொபைல்போனுக்கு பதில் மார்பிள் கல்’ : ஆன்லைன் மோசடியில் சிக்கிய பாஜக எம்.பி., - அதிர்ச்சித் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மேற்கு வங்களாத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி., காகன் முர்மு கடந்த வாரம் ஆன்லைனில் புதியதாக வந்த மொபையல் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.

அவர் ஆர்டர் செய்த ஒருவாரம் கழித்து அவருக்கு டெலிவரி பார்சல் ஒன்று வந்துள்ளது. தனது கனவருக்கு வந்த பார்சல் தானே என நினைத்து 11 ஆயிரத்து 999 ரூபாய் பணத்தைக் கொடுத்து அவரது மனைவி பார்சலை வாங்கியுள்ளார்.

பின்னர் வீட்டிற்கு வந்த காகன் முர்மு டெலிவரி பார்சலை பிரித்து பார்த்துள்ளார். அதில் மொபைல்போனுக்கு பதில் இரண்டு மார்பிள் கல்துண்டுகள் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த காகன் முர்மு அருகில் உள்ள காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.

பின்னர் இதுகுறித்து காகன் முர்மு, “தீபாவளி பண்டிகை என்பதால் ஆன்லைனில் சலுகையுடன் சாம்சங் போன் ஆர்டர் செய்திருந்தேன். நான் பார்சலைப் பிரிக்கும்போது சந்தேகம் எழுந்தது. ஏனெனில் தான் ஆர்டர் செய்தது சாம்சங் போன். ஆனால் ரெட்மி 5ஏ என்ற பெட்டியில் போன் வந்துள்ளதே என நினைத்துக்கொண்டேதான் பெட்டியை திறந்தேன்.

மேலும் அந்த பெட்டியில் சீல்கள் முன்பே உடைப்பட்டிருந்தது. மேலும் அதனை திறந்துப் பார்த்தப்போது அதில் நீளமான இரண்டு மார்பிள் கல் துண்டுகள் மட்டுமே இருந்தது. போன் ஆர்டர் செய்து ஒரு வாரத்திற்குள் வந்துவிட்டது.

என்னைப்போல் பலர் இதில் பாதிப்புள்ளாகியிருப்பார்கள். அதனால் இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசவுள்ளேன். மேலும் நுகர்வோர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர உள்ளேன்”என்று கூறினார்.

இதுபோல தொடர் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் நடைபெற்று வரும்வேளையில் பாஜக எம்.பி., ஒருவரே இதில் சிக்கிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories