இந்தியா

அயோத்தி வழக்கில் விசாரணை நிறைவு : தீர்ப்பு ஒத்திவைப்பு!

அயோத்தி வழக்கில் 40 நாள் வாதங்கள் முடிந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.

அயோத்தி வழக்கில் விசாரணை நிறைவு : தீர்ப்பு ஒத்திவைப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அயோத்தியில் பாபர் மசூதி அமைந்துள்ள 2.77 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன் நடைபெற்று வருகிறது.

கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. நாள்தோறும் விசாரணை என்ற அடிப்படையில் விடுமுறை நாட்கள் தவிர அனைத்து நாட்களிலும் நடைபெற்று வந்த விசாரணை இன்று 40-வது நாளை எட்டியுள்ளது.

விசாரணையின்போது தொல்லியல் ஆய்வுகளின் அடிப்படையில் இருதரப்புமே அயோத்தியின் சர்ச்சைக்குரிய இடம் தங்களுக்குச் சொந்தமானது என வாதிட்டனர்.

உள்பிரகாரம் ராமர் பிறந்த இடம் என்று இந்து அமைப்பினர் வாதிட்டனர். வெளிப்பிரகாரம் முழுமையாக முஸ்லிம்கள் பல ஆண்டுகளாக தொழுகை நடத்திய இடம். அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த இடம் என்று முஸ்லிம் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான முழு விசாரணையும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். அனைத்துகட்ட விசாரணையும் நிறைவடைந்த நிலையில், ஒரு மாத காலத்தில் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories