இந்தியா

உணவு தினத்தைக் கொண்டாடுகிறோம்: ஆனால், பசிக்கொடுமை உள்ள நாடுகளில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

உலகளாவிய பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான குறியீட்டில் இந்தியாவுக்கு 102-வது இடம் எனவும், பாகிஸ்தான், நேபாளம், வங்காளதேசத்தை விட இந்தியா பின்தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு தினத்தைக் கொண்டாடுகிறோம்: ஆனால், பசிக்கொடுமை உள்ள நாடுகளில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

உலகளாவிய பசி குறியீடு பட்டியல் அண்மையில் வெளியாகி உள்ளது. உலக அளவில் பசி மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் வாடுபவர்களை கணக்கெடுத்து அதன் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான பசி குறியீடு பட்டியலின்படி, இந்தியா பசிக்கொடுமை பிரச்னையில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

117 நாடுகள் இடம்பெற்றுள்ள இந்தப் பட்டியலில் இந்தியா 102-வது இடத்தில் உள்ளது. அண்டை நாடுகளான பாகிஸ்தான், நேபாளம், வங்காளதேசம் நாடுகளை விட பின்தங்கிய நிலையில் இந்தியா உள்ளது.

உணவு தினத்தைக் கொண்டாடுகிறோம்: ஆனால், பசிக்கொடுமை உள்ள நாடுகளில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

2000-ஆம் ஆண்டில், 113 நாடுகள் கொண்ட பசி குறியீடு பட்டியலில் இந்தியா 83-வது இடத்தைப் பிடித்திருந்தது. இப்போது, 117 நாடுகள் பட்டியலில் உள்ள நிலையில், இந்தியா 102-வது இடத்திற்கு பின்னடைவைச் சந்தித்துள்ளது.

பெலாரஸ், உக்ரைன், துருக்கி, கியூபா மற்றும் குவைத் உள்ளிட்ட பதினேழு நாடுகள் ஐந்துக்கும் குறைவான குறியீட்டு எண்களுடன் முதல் இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories