இந்தியா

“பா.ஜ.க ஆட்சியில் 55% விற்பனை சரிவு” : மீண்டும் ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு அளித்தது அசோக் லேலண்ட்!

ஆட்டோமொபைல் துறையில் கடுமையான சரிவு ஏற்பட்டதையடுத்து ஊழியர்களுக்கு அசோக் லேலண்ட் நிறுவனம் அக்டோபர் மாதத்தில் 2 முதல் 15 நாட்கள் வரை கட்டாய விடுப்பு அளித்துள்ளது.

“பா.ஜ.க ஆட்சியில் 55% விற்பனை சரிவு” : மீண்டும் ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு அளித்தது அசோக் லேலண்ட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலை காரணமாக வாகன விற்பனை கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. இதனால் வாகன உற்பத்தியையும் நாளுக்கு நாள் குறைத்து வருவதோடு, ஆட்டோமொபைல் தொழில்சார்ந்த உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் உற்பத்தியை குறைத்து வருகின்றன.

இந்தியாவில் கார் உற்பத்தியில் முன்னணியில் உள்ள நிறுவனங்களான ஹூண்டாய், மாருதி , டிவிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்து தொழிற்சாலையில் உற்பத்தியை நிறுத்தி வருகின்றன.

இதைத் தொடர்ந்து, இந்தியாவில் வணிக சந்தையில் லாரி போன்ற வாகனங்களைத் தயாரிப்பதில் முன்னோடி நிறுவனமான அசோக் லேலண்ட் நிறுவனம் விற்பனையில் நெருக்கடியைச் சந்தித்துள்ளதாக கூறியுள்ளது.

“பா.ஜ.க ஆட்சியில் 55% விற்பனை சரிவு” : மீண்டும் ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு அளித்தது அசோக் லேலண்ட்!

தனது ஊழியர்களுக்கு கடந்த மாதம் செப்டம்பர் 6, 7, 10, 11 தேதிகளில் கட்டாய விடுமுறை கட்டாய விடுப்பு அளித்தது. அதனைத் தொடர்ந்து தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயங்கும் தங்களது ஆலைகளில், அக்டோபர் மாதத்தில் 2 முதல் 15 நாட்கள் வரை வேலையில்லா நாட்களாக அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளது.

இந்த தகவலை கடிதம் மூலம் தேசிய பங்குச்சந்தை நிறுவனத்துக்கு அசோக் லேலண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அசோக் லேலண்ட்டின் வேலையில்லா நாட்கள் அறிவிப்பால் அந்நிறுவன தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்தாண்டு செப்டம்பர் 2019-ம் ஆண்டு வரையிலான விற்பனை விவரத்தை சமீபத்தில் அசோக் லேலண்ட் நிறுவனம் வெளியிட்டது. அதில், கடந்த செப்டம்பர் 2018ம் ஆண்டு 19,374 வாகனங்களை விற்றுள்ளது. ஆனால் 2019ம் ஆண்டு செப்டம்பர் வரையிலும் வெறும் 8,780 வாகனங்களை மற்றுமே விற்றுள்ளது. இது சுமார் 55 சதவிகித அளவுக்கு சரிவு எனக் குறிப்பிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories