இந்தியா

“சாப்பாடு கேட்டவன், என் கார் கதவைத் தட்டி...” - பெண் பத்திரிகையாளரின் அதிர்ச்சி வாக்குமூலம்!

அனுபூதி விஷ்னோய் எனும் டெல்லியில் வசிக்கும் பெண் பத்திரிகையாளர் தனக்கு நிகழ்ந்த பாலியல் அத்துமீறல் கொடுமையை விவரித்துள்ளார்.

“சாப்பாடு கேட்டவன், என் கார் கதவைத் தட்டி...” - பெண் பத்திரிகையாளரின் அதிர்ச்சி வாக்குமூலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தலைநகர் டெல்லியில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. இந்திய தலைநகரில் பெண்கள் எப்போதுதான் பாதுகாப்பாக உணர்வார்கள் எனும் கேள்வி பெண்களின் மனதில் தொக்கி நிற்கிறது.

இந்நிலையில், நேற்று மற்றொரு கொடூரமான நிகழ்வு ஒரு பெண் பத்திரிகையாளருக்கு நடந்தேறியிருக்கிறது. அனுபூதி விஷ்னோய் எனும் அந்த பெண் பத்திரிகையாளர் தனக்கு நிகழ்ந்த கொடுமையை விவரித்துள்ளார்.

நான் மாலை அலுவலகத்திலிருந்து கிளம்பும்போது ஒரு இளைஞன் என்னிடம் சாப்பிட கொஞ்சம் உணவு தரும்படி கேட்டான். ஆளைப் பார்த்தால், வேலை பார்த்து சபபிடுவதற்குரிய உடல் வலுவுடன் இருப்பதை உணர்ந்து நான் மறுத்து, என் காரில் போய் ஏறிக்கொண்டேன்.

என்னைப் பின் தொடர்ந்து வந்த அவன் தொடர்ந்து, கார் கண்ணாடியை தட்டினான். நான் உடனடியாக காரை இயக்க முயன்றும், கியர் லாக் ஆகி இருந்ததால் என்னால் உடனடியாக தப்பிக்க முடியவில்லை. நான் கியரை அன்லாக் செய்து, காரை ஸ்டார்ட் செய்யும்போது, அவன் தனது கால்சட்டையின் ஜிப்பை அவிழ்க்கத் தொடங்கினான்.

நான் அதிர்ச்சியடைந்து, எப்படியோ என் காரை முழு வேகத்தில் இயக்கி அங்கிருந்து தப்பித்துவிட்டேன். எனக்கு, பெப்பர் ஸ்பிரேவை உபயோகிக்கவே, போனை எடுக்கவோ கூட கால அவகாசம் இல்லை. இந்த ஆபத்திலிருந்து எப்படி தப்பித்தேன் என என்னால் இன்னும் நம்ப முடியவில்லை.” என அச்சத்தோடு தெரிவித்துள்ளார்.

மேலும், இப்படியான ஆபத்துச் சூழலில் பெண்கள் தப்பிப்பதற்கான வழிமுறைகளையும் வரிசையாக அவர் பதிவிட்டுள்ளார். அனுபூதி விஷ்னோயின் இந்தப் பதிவு வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories