இந்தியா

பாலியல் வழக்கில் சிக்கிய சின்மயானந்தா - கட்சி உறுப்பினரே இல்லை என அந்தர் பல்டி அடித்த பா.ஜ.க!

முன்னாள் அமைச்சர் சின்மயானந்தா எங்கள் கட்சியில் உறுப்பினரே இல்லை என உத்தரப்பிரதேச பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.

பாலியல் வழக்கில் சிக்கிய சின்மயானந்தா - கட்சி உறுப்பினரே இல்லை என அந்தர் பல்டி அடித்த பா.ஜ.க!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உத்தர பிரதேசத்தின் ஷாஜகான்பூர் நகரில் உள்ள ஸ்வாமி சுக்தேவானந்த் சட்டக் கல்லூரியின் தலைவர் சின்மயானந்தா. பா.ஜ.க சார்பில் 3 தடவை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் இணை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.

இவரது கல்லூரி விடுதியில் தங்கிப் படித்து வரும் 23 வயது மாணவி ஒருவர், சின்மயானந்தா தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டி வீடியோ ஆதாரத்தை வெளியிட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் சின்மயானந்தா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பின்னர் கடந்த செப்டம்பர் 20-ம் தேதி சிறப்பு விசாரணை குழுவால் சின்மயானந்தா கைது செய்யப்பட்டார். 2 நாட்கள் மட்டுமே சிறையிலிருந்த சின்மயானந்தா, தற்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாலியல் வழக்கில் சிக்கிய சின்மயானந்தா - கட்சி உறுப்பினரே இல்லை என அந்தர் பல்டி அடித்த பா.ஜ.க!

பா.ஜ.க-வின் முக்கிய பொறுப்பில் இருப்பவர்களே இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவதால், அக்கட்சியினரால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்படுவதாக எதிர்க்கட்சி தலைவர்களும், பெண்கள் அமைப்பினரும் குற்றம் சாட்டிவருகின்றனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் சின்மயானந்தா எங்கள் கட்சியில் உறுப்பினரே இல்லை என உத்தரப்பிரதேச பா.ஜ.க பல்டி அடித்துள்ளது.

இதுதொடர்பாக உத்தரபிரதேச பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ”சின்மயானந்தா இனி பா.ஜ.கவின் உறுப்பினர் இல்லை. எங்கள் கட்சியில் உறுப்பினர் பதிவுகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டதால், அவர் எந்த ஆண்டில் இருந்து கட்சி உறுப்பினர் இல்லை என்று செல்வது இயலாதக் காரியம். அவர் பா.ஜ.க-வில் உறுப்பினராகவே இல்லாத போது, அவரைப் பற்றி எதுவும் கூறமுடியாது.” என மழுப்பலாக பேசியுள்ளார்.

சின்மயானந்தா விவகாரத்தால் தங்கள் கட்சிக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை மறைக்கவே, பா.ஜ.க இதுபோல பின்வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. வாஜ்பாய் ஆட்சி காலத்தில் மத்திய அமைச்சராக சின்மயானந்தா இருந்த போது, இதுபோலவே பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்ததும், சின்மயானந்தா அந்த பெண்ணுடன் சண்டையிடுவது போன்ற வீடியோ ஒன்றும் வெளியானது. ஆனால், அப்போது அந்த விவகாரத்தை அப்படியே அமுக்கி, சின்மயானந்தாவை பா.ஜ.க காப்பாற்றியது. ஆனால், இம்முறை விவகாரம் கைய மீறிப் போகவே, அவரை கட்சியில் இல்லவே இல்லை என்று கூறி தப்பிக்க நாடகம் ஆடுகிறது பா.ஜ.க.

banner

Related Stories

Related Stories