இந்தியா

மோடி பிறந்தநாளை கொண்டாட உயர்த்தப்பட்ட சரோவர் அணை நீர்மட்டம்: 100 கிராமங்கள் மூழ்கியது; மேதாபட்கர் ஆவேசம்!

மோடி பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக சர்தார் சரோவர் அணையின் நீர்மட்டம் உயர்த்தப்பட்ட சம்பவம் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோடி பிறந்தநாளை கொண்டாட உயர்த்தப்பட்ட சரோவர் அணை நீர்மட்டம்: 100 கிராமங்கள் மூழ்கியது; மேதாபட்கர் ஆவேசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

நர்மதா ஆற்றின் சர்தார் சரோவர் அணையில் நீர்மட்டம் பிரதமரின் பிறந்தநாளுக்காக மட்டும் உயர்த்தப்பட்டதாக சமூக ஆர்வலர் மேதா பட்கர் கூறியுள்ளார்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் மேதாபட்கர் கூறுகையில், "குஜராத் முதல்வரும் மற்ற அதிகாரிகளும் நர்மதா ஆற்றின் கரையில் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்காக மட்டுமே அணையின் நீர்மட்டத்தை 139 மீட்டராக உயர்த்தினர்.

அக்டோபர் 30 ஆம் தேதி அணை நிரப்பப்படும் என்று விஜய் ரூபானியின் அரசாங்கம் முதலில் அறிவித்தது. இது செப்டம்பர் 30 க்குள் எப்படியும் நிரம்பிவிடும் என்று பின்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால் செப்டம்பர் 17 க்கு முன்பு அணை எவ்வாறு நிரம்பியது?

மோடி பிறந்தநாளை கொண்டாட உயர்த்தப்பட்ட சரோவர் அணை நீர்மட்டம்: 100 கிராமங்கள் மூழ்கியது; மேதாபட்கர் ஆவேசம்!

ஒருவரின் மகிழ்ச்சிக்காக ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான கிராமங்கள் மூழ்கியுள்ளன. மோடியின் பிறந்தநாள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துக்கநாள்." என்று செய்தியாளர்களிடம் மேதா பட்கர் தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமல்லாமல், நேற்றுமுன்தினம் நர்மதா ஆற்றங்கரையில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை தனது ட்விட்டரில் வீடியோவாக பதிவு செய்து பிரதமர் நரேந்திரமோடி சிலாகித்து இருந்தார். இந்த பதிவுக்கு பதில் எழுதியுள்ள சமூக ஆர்வலர் மேதா பட்கர், பிரதமர் மோடியின் பதிவை கோடிட்டுக்காட்டி அவரைக் கடுமையாக சாடியுள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பதிவில், சர்தார் சரோவர் அணை வெறும் கட்டமைப்பைக் கொண்டது அல்ல. இது 250 கி.மீ உப்பங்கழிகள்(back Waters) மற்றும் 70 கி.மீ கரையோரங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான கால்வாய் கட்டமைப்பு கொண்டது என்று கூறியுள்ள மேதா பட்கர், பிரதமருக்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கக்கூட நேரம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

நர்மதை ஆற்றின் நீர்மட்டத்தை 122 மீட்டரிலிருந்து 138.68 மீட்டராக உயர்த்துவதை எதிர்த்து மேதா பட்கர் நீண்ட காலமாக போராடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories