இந்தியா

மோடி ஆட்சியில் கல்வித் துறைக்கும் பின்னடைவு: டைம்ஸ் ஏடு நடத்திய ஆய்வில் அதிர்ச்சி!

உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் ஒன்று கூட இந்திய பல்கலைக்கழகம் இடம்பெறாதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மோடி ஆட்சியில்  கல்வித் துறைக்கும் பின்னடைவு: டைம்ஸ் ஏடு நடத்திய ஆய்வில் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகில் உள்ள சிறந்த 300 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இந்திய பல்கலைக்கழகங்கள் ஒன்று கூட இடம்பெறாதது கல்வியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆண்டுதோறும் உலகின் தலைச்சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலை அமெரிக்காவைச் சேர்ந்த டைம்ஸ் நாளிதழ், உலகளாவிய கல்வி அமைப்பு இணைந்து வெளியிடுவது வழக்கம்.

மோடி ஆட்சியில்  கல்வித் துறைக்கும் பின்னடைவு: டைம்ஸ் ஏடு நடத்திய ஆய்வில் அதிர்ச்சி!

அதன்படி, 2019ம் ஆண்டுக்கான பல்கலைக்கழக பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், பிரிட்டனைச் சேர்ந்த ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் முதலிடத்திலும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் இரண்டாமிடத்திலும் உள்ளது.

அதேபோல், அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டான்போர்டு, மசாசூட்டூஸ், கலிஃபோர்னியா பல்கலைக்கழகங்கள் முறையே 3, 4, 5 இடங்களை பெற்றுள்ளது.

மோடி ஆட்சியில்  கல்வித் துறைக்கும் பின்னடைவு: டைம்ஸ் ஏடு நடத்திய ஆய்வில் அதிர்ச்சி!

அதேச்சமயத்தில் உலகின் சிறந்த 300 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இந்தியாவில் உள்ல ஒரு பல்கலைக்கழகங்களும் இடம்பெறவில்லை.

டெல்லி, கரக்பூர், ரோபார், இந்தூர், ஆகிய தொழில்நுட்பக் கழகங்கள் அனைத்தும் 300ல் இருந்து 600 வரை உள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ளன. உலகின் 92 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக டைம்ஸ் ஏடு தெரிவித்துள்ளது.

மோடி ஆட்சியில்  கல்வித் துறைக்கும் பின்னடைவு: டைம்ஸ் ஏடு நடத்திய ஆய்வில் அதிர்ச்சி!

ஏற்கெனவே இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியால் ஆட்டோமொபைல், உணவுத்துறை, ஜவுளித்துறை உள்ளிட்ட பல துறைகள் கடுமையான பாதிப்பை சந்தித்து வரும் நிலையில், மோடி ஆட்சியில் கல்வித்துறையும் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் கல்வியாளர்கள் பெரும் அதிர்ச்சிக்கும், அதிருப்திக்கும் ஆளாகியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories