இந்தியா

விக்ரம் லேண்டர் நிலவிலிருந்து 2.1 கி.மீ தொலைவில் மிஸ் ஆகல... வெறும் 355 மீட்டர்தான்: வெளியான புதிய தகவல்!

சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், 2.1 கி.மீ தூரத்தில் சிக்னல் துண்டிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் 355 மீட்டர் தொலைவில் தான் சிக்னல் துண்டிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திரயான் 2 விண்கலத்தின் ஆர்பிட்டரில் இருந்து பிரிந்து, நிலவில் இருந்து 35 கி.மீ உயரத்தில் சுற்றி வந்த விக்ரம் லேண்டர் கடந்த சனிக்கிழமை அதிகாலை நிலவில் தரை இறங்க முயன்றது.

விக்ரம் லேண்டர் நிலவில் இருந்து 2.1 கி.மீ தொலைவில் இருந்தபோது, அதற்கும் இஸ்ரோ தரை கட்டுப்பாட்டு நிலையத்துக்கும் இடையேயான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து நிலவுக்கு அருகே தென்துருவத்தில் 100 கி.மீ உயரத்தில் சுற்றி வரும் சந்திரயான் 2 விண்கலத்தின் ஆர்பிட்டர், நிலவின் தரையில் விக்ரம் லேண்டர் விழுந்து கிடப்பதை சில தினங்களுக்கு முன்னர் கண்டுபிடித்தது. விக்ரம் லேண்டரின் தொடர்பை பெற தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக இஸ்ரோ அறிவித்தது.

விக்ரம் லேண்டர் நிலவிலிருந்து 2.1 கி.மீ தொலைவில் மிஸ் ஆகல... வெறும் 355 மீட்டர்தான்: வெளியான புதிய தகவல்!

இந்நிலையில், சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், 2.1 கி.மீ தூரத்தில் சிக்னல் துண்டிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் நிலவிலிருந்து 355 மீட்டர் தொலைவில் தான் சிக்னல் துண்டிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

நிலவை நெருங்கும் விக்ரம் லேண்டர் குறித்த வரைபடம் மூலம் இந்தத் தகவல் விளக்கப்பட்டுள்ளது. வரைபடத்தில் உள்ள சிவப்பு மஞ்சள் மற்றும் பச்சை நிறக் கோடுகள் விக்ரம் லேண்டரின் நிலையைக் குறிப்பிடுகின்றன. சிவப்புக் கோடு திட்டமிடப்பட்ட இலக்காகவும், பச்சை நிறக் கோடு விக்ரம் லேண்டரின் திசைமாறிய நிலையையும் குறிப்பிடுகிறது.

இதை விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில், சிவப்பு நிறக் கோட்டின் மிக அருகில் தான் பச்சை நிறக் கோட்டின் நிலை மாறி இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். நிலவிலிருந்து 2.1 கி.மீ தொலைவில் பாதை விலகத் துவங்கி, சுமார் 355 மீட்டர் தொலைவில் தான் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

banner

Related Stories

Related Stories