இந்தியா

தமிழிலும் ரயில்வே தேர்வுகள் - தி.மு.க போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என மு.க.ஸ்டாலின் பெருமிதம்

ரயில்வேயில் துறை சார்ந்த ஜி.டி.சி.இ தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தலாம் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழிலும் ரயில்வே தேர்வுகள் - தி.மு.க போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என மு.க.ஸ்டாலின் பெருமிதம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ரயில்வேயில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த தேவையில்லை என்றும், ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே நடத்தினால் போதும் என ரயில்வே வாரியம் அறிவித்திருந்தது. ரயில்வே துறை சார்ந்த ஜி.டி.சி.இ தேர்வு கேள்வித்தாளை ஆங்கிலம், இந்தியில் தயாரிக்க உத்தரவித்திட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்தியை வளர்க்கும் விதமாக ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்புக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தார். தி.மு.க மகளிரணி செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி தலைமையில் சென்னை தெற்கு ரயில்வே அலுவலகத்தை முற்றுகையிட்டு தி.மு.கவினர் போராட்டம் நடத்தினர்.

மேலும், இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தெற்கு ரயில்வே பொது மேலாளரை சந்தித்து தி.மு.க.வினர் மனு அளித்தனர். இந்நிலையில், ரயில்வேயில் துறை சார்ந்த ஜி.டி.சி.இ தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தலாம் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

இந்தி, ஆங்கிலத்துடன் பிராந்திய மொழிகளில் தேர்வுகளை நடத்த தடை இல்லை எனவும் ரயில்வே வாரியம் விளக்கமளித்துள்ளது. இது தி.மு.க.வின் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது, ''ரயில்வேயில் துறைசார்ந்த GDCE தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநில மொழிகளில் நடத்தலாம் என்று ரயில்வே வாரியம் அறிவித்திருப்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி.

தமிழ் மொழிக்காக தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியுடன் போராடும் '' எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories