இந்தியா

சந்திரயான் 2 விண்கலம் எத்தனை நாட்கள் நிலவில் இருக்கும்? எப்படிச் செயல்படும்? : விரிவான தகவல்கள்!

நிலவில் தரையிறங்கி சந்திரயான் 2 விண்கலமும், அதன் கருவிகளும் மேற்கொள்ளவுள்ள பணிகள் குறித்த தொகுப்பு.

சந்திரயான் 2 விண்கலம் எத்தனை நாட்கள் நிலவில் இருக்கும்? எப்படிச் செயல்படும்? : விரிவான தகவல்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நிலவின் தென் துருவப்பகுதியை ஆய்வு செய்ய விண்ணில் செலுத்தியுள்ள சந்திரயான் 2 விண்கலம், செப்டம்பர் 7ம் தேதி அதிகாலை 1 மணியளவில் நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. உலகமே உற்றுநோக்கி எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது. இஸ்ரோவின் இந்த சாதனைப் பயணத்தின் முக்கிய அங்கமாக விளங்கும் லேண்டர், ரோவர், ப்ரக்யான் கருவிகளின் சிறப்பம்சங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்குகிறது இந்தத் தொகுப்பு.

சந்திரயான் 2 விண்கலத்தின் சாதனை பயணத்தின் முக்கிய அம்சமாக ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர், ப்ரக்யான் ரோவர் ஆகிய 3 பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. ஆர்பிட்டர் நிலவைச் சுற்றி வரும். விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கி நில அதிர்வுகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யும். லேண்டரில் இருந்து வெளியேறும் ப்ரக்யான் ரோவர் நிலவில் ஊர்ந்து சென்று துல்லியமாக ஆய்வுகளை மேற்கொள்ளும்.

சந்திரயான் 2 விண்கலம் எத்தனை நாட்கள் நிலவில் இருக்கும்? எப்படிச் செயல்படும்? : விரிவான தகவல்கள்!

நிலவின் இருண்ட பகுதியான தென் துருவத்தை இதுவரை எந்த நாடுகளும் ஆய்வு செய்ததில்லை. இதுவரை எந்த உலக நாடுகளும் ஆய்வு செய்யாத நிலவின் தென் துருவத்திலுள்ள Manzinus C and Simpelius N என இரண்டு மிகப்பெரிய பாறைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் விண்கலத்தை தரையிறுக்குவதற்கு முடிவு செய்து அதில் ஆய்வு செய்கிறது இந்திய விண்வெளித்துறை.

இந்தப் பகுதியில் நிலவின் மேற்பரப்பில் காணப்படும் அதிக ஆபத்துகளின் காரணமாக எந்த நாடும் விண்கலத்தை இதுவரை அனுப்பவில்லை. இதற்கு முன்பாக ரஷ்யா, அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் நிலவுக்கு விண்கலத்தை அனுப்பியுள்ளன. ஆனால், அவை அனைத்தும் நிலவின் மத்தியரேகை பகுதி, ஓரளவு சமவெளிப் பகுதியாக இருந்த இடங்களுக்கு விண்கலனை அனுப்பி ஆராய்ச்சி மேற்கொண்டன.

சந்திரயான் 2 விண்கலம் எத்தனை நாட்கள் நிலவில் இருக்கும்? எப்படிச் செயல்படும்? : விரிவான தகவல்கள்!

ஆனால், நிலவின் இந்த தென் பகுதி முழுவதும் பள்ளங்களும், கடினமான நிலப்பரப்பும் நிறைந்ததாக இருக்கும். ஆபத்தைப் பொருட்படுத்தாமல், அதனை சவாலாகக் கொண்டு செயல்படுத்தி வருகிறது இந்திய விண்வெளித்துறை. ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய 3 மிக முக்கிய பகுதிகள் மட்டுமல்லாமல் இந்த விண்கலத்தில் 13 கருவிகளை இந்தியா பொருத்தியுள்ளது. இவற்றைத் தவிர நாசாவின் இன்னொரு கருவியை இந்தியா கட்டணம் எதுவும் பெறாமல் அனுப்பி வைத்துள்ளது.

இவை அனைத்தும் நிலவின் தென்துருவத்திலுள்ள இடத்தை மிகவும் நெருங்கிச் செல்கின்றன. மனிதப் பார்வை படாத நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் சந்திரயான்-2 பல புதிய தகவல்களை பூமிக்கு அனுப்பும். அவ்வாறாக புதிய தகவல்களை அனுப்பும் பட்சத்தில் நிலவின் மனித இனம் வாழ்வதற்குத் தேவையான அனைத்து சாத்தியக்கூறுகளையும் இஸ்ரோ விஞ்ஞானிகள் உறுதி செய்வர்.

சந்திரயான் 2 விண்கலம் எத்தனை நாட்கள் நிலவில் இருக்கும்? எப்படிச் செயல்படும்? : விரிவான தகவல்கள்!

45 நாட்கள் பயணத்தில் நிலவின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து பிரிந்து இந்த விண்கலம் நிலவின் உட்பகுதியில் தரையிறங்கும் கடைசி நிமிடங்கள் சவாலானவை. நிலவுக்கு மிக அருகில் இருந்து இந்த விக்ரம் லேண்டர் எந்தப் பகுதியில் தரையிறங்கலாம் என்பதை ஆய்வு செய்யும். நிலவில் தரையிறங்கும் ஒவ்வொரு நொடியும் திக் திக் நிமிடங்கள் தான். பள்ளமான பகுதிகள், பாறைகள், சேதப்படுத்தக்கூடிய வேறு ஏதும் இல்லாத பகுதியில் விக்ரம் லேண்டர் தரையிறங்க வேண்டும்.

திட்டமிட்டபடி Manzinus C and Simpelius N ஆகிய இரண்டுக்கும் இடையே லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்குவதே இஸ்ரோ விஞ்ஞானிகளின் முக்கிய சாதனை. விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய பின் அதில் இருந்து ப்ரக்யான் எனும் 6 சக்கர வாகனம் கொண்ட ரோவர் வெளியேறும். 27 கிலோ எடையுடைய இந்த ப்ரக்யான் ரோவர் சோலாரை கொண்டு செயல்படும்.

சந்திரயான் 2 விண்கலம் எத்தனை நாட்கள் நிலவில் இருக்கும்? எப்படிச் செயல்படும்? : விரிவான தகவல்கள்!

நிலவில் முழுமையாக 500 மீட்டர் மட்டுமே தனது ஆய்வை மேற்கொள்ளும். நொடிக்கு ஒரு சென்டிமீட்டர் மட்டுமே நகரும் இந்த ரோவர் தண்ணீர், தாதுக்கள், கனிம வளங்கள், மனிதன் வாழ்வதற்குத் தேவையான அனைத்து சூழலும் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து புகைப்படம் எடுத்து விக்ரம் லேண்டருக்கு அனுப்பும்.

ஆர்பிட்டர் மற்றும் ரோவர் உடன் தொடர்பில் இருக்கும் இந்த விக்ரம் லேண்டர் நேரடியாக கட்டுப்பாட்டு அறைக்கு ரோவர் எடுத்த புகைப்படங்களை அனுப்பும். விக்ரம் லேண்டர் நிலவில் ஒருநாள் மட்டுமே தனது ஆய்வினை மேற்கொள்ளும்.

973 கோடி ரூபாய் செலவு ஒருநாள் பயணத்திற்கா எனக் கேள்வி எழலாம். நிலவில் ஒருநாள் என்பது பூமியில் 14 நாட்களுக்குச் சமம். இந்த நாட்களில் அரிய ஆய்வுகளை லேண்டர் ஆய்வு செய்து அனுப்பும். அதேசமயம், நிலவைச் சுற்றி வரும் ஆர்பிட்டர் ஒரு வருட காலம் அதன் பணியை மேற்கொள்ளும். இந்த ஒரு வருட காலத்தில் நிலவின் மேற்பரப்பில் உள்ள முக்கிய தகவல்களை ஆர்பிட்டர் பூமிக்கு அனுப்பும்.

banner

Related Stories

Related Stories