இந்தியா

JEE தேர்வில் இந்தி, குஜராத்திக்கு முக்கியத்துவம் : தமிழ் உட்பட பிற மாநில மொழிகளை ஓரங்கட்டிய பா.ஜ.க அரசு!

பொறியியல் படிப்புக்கான JEE நுழைவுத் தேர்வில் மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

JEE தேர்வில் இந்தி, குஜராத்திக்கு முக்கியத்துவம் : தமிழ் உட்பட பிற மாநில மொழிகளை ஓரங்கட்டிய பா.ஜ.க அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., என்.ஐ.டி. போன்றவற்றில் மாணவர்களைச் சேர்ப்பற்காக JEE நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நுழைவுத் தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டும் நடத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தி மொழி சேர்க்கப்பட்டது.

இதனையடுத்து, தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளிலும் JEE தேர்வு நடத்தப்பட வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தன. ஆகையால், எதிர்வரும் ஆண்டுக்கான நுழைவுத் தேர்வில் பிற மொழிகளும் சேர்க்கப்படும் என மாணவர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், JEE தேர்வில் பிராந்திய மொழிகளை சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய பா.ஜ.க அரசு புறக்கணித்துள்ளது. இதற்கு கல்வியாளர்கள் பலரும் வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

அரசியல் நோக்கத்திற்காக இந்தி மற்றும் குஜராத்தி மொழிகளுக்கு மட்டும் பொறியியல் நுழைவுத் தேர்வில் முக்கியத்துவம் அளிப்பதாக மொழி ஆர்வலர்களும், கல்வியாளர்களும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

குஜராத்தி மொழியில் JEE நுழைவுத்தேர்வை எழுதுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறதென்றால், மற்ற மாநில மொழிகளிலும் தேர்வு நடத்தப்பட வேண்டும் என முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி கிறிஸ்துதாஸ் காந்தி தெரிவித்துள்ளார்.

ஆங்கிலம், இந்தி மட்டுமல்லாமல் பாரபட்சம் பார்க்கும் வகையில் குஜராத்தி மொழியிலும் தேர்வு நடத்தப்படும் என்றால் மற்ற மாநில மொழிகளுக்கு துரோகம் விளைவிப்பது போன்றே கருதப்படுகிறது என திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள JEE முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories