இந்தியா

பா.ஜ.க முன்னாள் அமைச்சர் மீது பாலியல் குற்றச்சாட்டு; புகார் தெரிவித்த மாணவி மாயம்: போலிஸார் வழக்கு பதிவு!

பா.ஜ.க முன்னாள் மத்திய இணை அமைச்சர் சுவாமி சின்மயானந்த் மீது பாலியல் புகார் அளித்த மாணவி மாயமாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பா.ஜ.க முன்னாள் அமைச்சர் மீது பாலியல் குற்றச்சாட்டு; புகார் தெரிவித்த மாணவி மாயம்: போலிஸார் வழக்கு பதிவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பா.ஜ.க ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றச்செயலில் அதிகம் ஈடுபடுவதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன.

பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய உத்திர பிரதேச உன்னாவோ பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான அம்மாநில பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இதனைத்தொடர்ந்து, டெல்லியில் முன்னாள் பா.ஜ.க எம்.எல்.ஏ மீது மருமகளே புகார் கொடுத்துள்ள சம்பவமும் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது பா.ஜ.கவைச் சேர்ந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் சுவாமி சின்மயானந்த் மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்வதாக வீடியோ மூலம் புகார் தெரிவித்த பெண் காணாமல் போனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தின் ஷாஜகான்பூர் நகரில் ஸ்வாமி சுக்தேவானந்த் சட்டக்கல்லூரியின் தலைவராக சின்மயானந்த் இருந்து வருகிறார். இவர் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் அமைச்சரவையில் இணை அமைச்சராக இருந்தவர் சின்மயானந்த். இவரின் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வரும் 23 வயது நிரம்பிய மாணவி ஒருவர் சின்மயானந்த் மீது பாலியல் குற்றஞ்சாட்டி கடந்த வாரம் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளிட்டார். அந்த வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பா.ஜ.க முன்னாள் அமைச்சர் மீது பாலியல் குற்றச்சாட்டு; புகார் தெரிவித்த மாணவி மாயம்: போலிஸார் வழக்கு பதிவு!

அந்த வீடியோவில், ஷாஜகான்பூர் பகுதியில் உள்ள எஸ்.எஸ் கல்லூரியில் படித்து வருகிறேன். கல்லூரியில் உயர் பதவியில் இருக்கும் துறவி ஒருவர் இங்குள்ள பெண்களை தவறாகப் பயன்படுத்திவருகிறார். உண்மையை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்கள்.

அவருக்கு எதிரான அனைத்து ஆதாரங்கள் இருந்தும் அவர் மீது யாராலும் நடவடிக்கை எடுக்க முடியாது என மிரட்டுகிறார்கள். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத் ஆகியோர் உதவி செய்ய வேண்டும். எனக்கும் என் குடும்பத்திற்கும் கொலை மிரட்டல் வருகின்றன. எனக்கு நீதி வேண்டும் ” என அந்தப் பெண் கூறியிருந்தார்.

பின்னர் அந்த மாணவியின் தந்தை காவல் நிலையத்தில், சின்மயானந்திற்கு , எதிராக புகார் கொடுத்தார். ஆனால் அந்த புகாரை உடனடியாக ஏற்றுக் கொள்ளாமல் இழுத்தடித்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போது மாணவி காணவில்லை என்ற புகாரை அடுத்து சுமார் மூன்று நாட்கள் கழித்து போலிஸார் புகாரை ஏற்றுக் கொண்டு, சின்மயானந்த் மீது வழக்குப் பதிவு செய்யதுள்ளனர். முன்னதாக சின்மயானந்த் ஆசிரமத்தில் இருந்த பெண்ணும் இவர் மீது பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories