இந்தியா

“பா.ஜ.க-வினரால் பெண்களுக்கு பாதுகாப்பில்லை” சிறுமியை மிரட்டி பாலியல் வல்லுறவு செய்த பாஜக நிர்வாகி கைது!

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க தலைவர் சந்தீப் கோபிநாத் மாலி, சிறுமி ஒருவரை கடந்த 4 ஆண்டுகளாக மிரட்டி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

“பா.ஜ.க-வினரால் பெண்களுக்கு பாதுகாப்பில்லை” சிறுமியை  மிரட்டி பாலியல் வல்லுறவு செய்த பாஜக நிர்வாகி கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பா.ஜ.க ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றச்செயலில் அதிகம் ஈடுபடுவதே பா.ஜ.கவினர் எனவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் உத்திர பிரதேச உனா பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளி அம்மாநில பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் என்பவர். அவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

பின்னர் டெல்லியில் முன்னால் பா.ஜ.க எம்.எல்.ஏ மீது மருமகளே புகார் கொடுத்துள்ள சம்பவமும் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது மகாராஷ்டிரா மாநில பா.ஜ.க தலைவர் மீது பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது அம்மாநில பா.ஜ.க-வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் வசித்து வருபவர் சந்தீப் கோபிநாத் மாலி. பா.ஜ.க-வின் கல்யாண் நகர துணைத் தலைவராக பதவி வருகிறார். இவர், கடந்த 2015-ம் ஆண்டு முதல், மும்பையைச் சேர்ந்த ஒரு சிறுமியை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி வந்துள்ளார்.

சந்தீப் கோபிநாத் மாலி
சந்தீப் கோபிநாத் மாலி

சிறுமிக்கு 13 வயதாக இருந்த போது தொடங்கி, கடந்த 4 ஆண்டுகளாக இந்தக் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். தற்போது சிறுமிக்கு 17 வயதாகும் நிலையில், அவர், பா.ஜ.க தலைவர் சந்தீப் கோபிநாத்தால் தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி, தனது பெற்றோருடன் மண்படா காவல்நிலையத்தில் துணிந்து புகார் அளித்துள்ளார்.

போலிஸார், சிறுமி கொடுத்தப் புகாரின் அடிப்படையில் பா.ஜ.க தலைவர் சந்தீப் மாலி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து, அவரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து மாதர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், “நாட்டில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டிய கடமை அந்நாட்டு அரசுக்கு உள்ளது. ஆனால் இந்தியாவில் அது தலைகீழாக உள்ளது. நாட்டில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய அவர்களாலேயே பெண்கள் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.

குறிப்பாக பா.ஜ.க-வினர்களிடம் இருந்து பெண்களை பாதுகாக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ள பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் பொரும்பாலான வழக்கில் பா.ஜ.கவினர்களுக்கு தொடர்பு உள்ளது என்பது தெரியவந்துள்ளது. இது வேதனைக்குறிய விஷயமாக பெண்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது.” என அவர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories