இந்தியா

தமிழகத்திற்கு தீவிரவாத அச்சுறுத்தல்... 70 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார நெருக்கடி - 2 மணி வரை இன்று

தமிழகத்திற்கு தீவிரவாத அச்சுறுத்தல்... 70 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார நெருக்கடி - 2 மணி வரை இன்று
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்திற்கு தீவிரவாத அச்சுறுத்தல்!

தமிழகத்திற்குள் ஆறு பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாகவும் அவர்கள் கோயம்புத்தூரில் குடியேறியிருப்பதாகவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவின் மோசமான நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்?

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது பலரையும் கலக்கமடையச் செய்துள்ளது.

நிதி ஆயோக் துணைத் தலைவர் அச்சம்!

இந்தியாவில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.கவினர் இந்தியாவில் பொருளாதார நெருக்கடி அச்சம் இல்லை எனப் புரட்டுகளைப் பரப்பி வரும் நிலையில் நிதி ஆயோக்கின் துணைத் தலைவரே இப்படித் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிதியமைச்சகத்தை சீண்டிய பொருளாதார ஆலோசனைக்குழு உறுப்பினர்; என்ன செய்ய போகிறார் நிர்மலா?

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினரான ஷமிகா ரவி, இந்தியா பெரும் பொருளாதார தேக்கநிலையைச் சந்தித்து வருவதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

பொருளாதாரத்தை சீர்படுத்த பெரிய சீர்திருத்தங்கள் தேவைப்படும்; வெறும் ஒட்டுவேலைகள் பயன்தராது. பொருளாதார வீழ்ச்சியை நிதியமைச்கத்திடம் மட்டும் விட்டுவிடுவது, நிறுவனத்தின் மொத்த வளர்ச்சியையும் கணக்குகள் துறையிடம் ஒப்படைப்பது போன்றதாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்

இந்திய அணியிக்கு புதிய பேட்டிங் பயிற்சியாளர் நியமனம் !

இந்திய அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக இருந்த சஞ்சய் பாங்கரின் பதிவிக் காலம் முடிவடைந்தது. இதையடுத்து முன்னாள் கிரிக்கெட் வீரர் விக்ரம் ரத்தோர் புதிய பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ராஜிவ் காந்தி உங்களைப் போல் அல்ல - மோடி அரசை தாக்கிப் பேசிய சோனியா காந்தி!

“1984-ல் ராஜீவ் காந்தி அறுதிப் பெரும்பான்மையுடன்தான் ஆட்சியமைத்தார்; ஆனால் மக்களிடையே அச்சத்தைப் பரப்ப அவர் அதிகாரத்தை பயன்படுத்தவில்லை” என பா.ஜ.க-வை கடுமையாகச் சாடியுள்ளார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.

banner

Related Stories

Related Stories